ஆன்லைன் டிக்கெட் வசதி! நிர்மலா சீதாராமனைச் சந்தித்து நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கத்தினர்

news18
Updated: September 11, 2019, 7:54 PM IST
ஆன்லைன் டிக்கெட் வசதி! நிர்மலா சீதாராமனைச் சந்தித்து நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கத்தினர்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு
news18
Updated: September 11, 2019, 7:54 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ஆன்லைன் டிக்கெட் வசதி செய்ய உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, தமிழ் சினிமாத்துறை சார்பாக முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. முதல் கோரிக்கையாக ஜிஎஸ்டி-யில் திரைத்துறைக்கு சில சலுகை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதற்கு, அமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.

இரண்டாவதாக திரையரங்கில் டிக்கெட் விற்பனை ஆகும்போதே நேரடியாக ஜிஎஸ்டி தொகை ஜிஎஸ்டி அக்கவுண்டுக்குச் செல்ல வழிவகை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசும் இதற்கான ஏற்பாடு செய்துள்ளது என்று கூறினார்கள். அதற்கு அமைச்சர் ஆவனம் செய்வதாக கூறினார்.


மூன்றாவதாக ஜிஎஸ்டி மற்றும் சேவை வரியில் தயாரிப்பாளர்களுக்கு புரிதல் இல்லாமல் இருக்கின்ற காரணத்தினால் சிறிது காலம் அவகாசம் தந்தால் அரசுக்கு சேரவேண்டிய ஜிஎஸ்டி தொகை நேரடியாக செலுத்தபடும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு நேரடியாக டெல்லியிலுள்ள அமைச்சர் அலுவலகத்திற்கு வாருங்கள். அங்கு உங்களுடைய கோரிக்கைகளை வழங்குங்கள். அதற்கு உரிய ஆவனம் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க: பள்ளியில் உல்லாசம்; ஆசிரியருக்கு தர்ம அடி

Loading...

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...