தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த டி.சிவா அணி!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த டி.சிவா அணி!
தயாரிப்பாளர்கள்
  • Share this:
டி.சிவா தலைமையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் அணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை ஜுன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணியினரின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி என்று டி.சிவா தலைமையிலான அணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் டி.சிவா தலைவராகவும், துணைத்தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், தனஞ்செயன், பொருளாளராக முரளிதரன், செயலாளர்களாக தேனப்பன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.


இந்த அணியிலிருந்து செயற்குழு உறுப்பினர்களாக நடிகர் ராதாரவி, கே.ராஜன், கே.எஸ்.ஸ்ரீநிவாசன், சித்ரா லெட்சுமணன், மனோபாலா, ஆர்.வி.உதயகுமார், மனோபாலா, பாபு கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்ட 21 பேர் போட்டியிடுகின்றனர்.



திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாகத் திரைப்படங்கள் எடுக்கவும், திரைப்படம் எடுக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழவும் உழைப்பதே எங்கள் அணியின் நோக்கம் என்று டி.சிவா தலைமையிலான அணி அறிவித்துள்ளது.கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் அணியினர் இந்தமுறை தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை - பிரபல இயக்குநர் விளக்கம்
First published: March 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading