Home /News /entertainment /

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்கான விதிகளில் மாற்றம்…

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்கான விதிகளில் மாற்றம்…

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்.

தீர்மானத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சில தயாரிப்பாளர்கள் கூறியுள்ளதால், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
7 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.  எனினும், 95 சதவீதம் பேர் ஆதரவளித்ததாக நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் முரளி ராமநாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.சுரேஷ், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சங்க விதிகளில் திருத்தம் செய்து இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் சலசலப்பு ஏற்பட்டது.

தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுகான தேர்தலில் போட்டியிடுவோர், இதற்கு முன்பு ஒருமுறை நிர்வாகியாகவோ அல்லது 2 முறை செயற்குழு உறுப்பினராகவோ இருந்திருக்க வேண்டும் எனவும்,2 திரைப்படங்களை தயாரித்து, அதை குறைந்தபட்சம் 25 திரையரங்குகளில் வெளியிட்டிருந்தால் மட்டுமே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சிலர், தீர்மானத்திற்கு எதிராகவும், தேர்தல் தேதியை அறிவிக்கக்கோரியும் முழக்கமிட்டனர்.

புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்ஏ.சந்திரசேகர், ஜேஎஸ்கே.சதீஷ், ஆர்வி.உதயகுமார் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சேகர், ஏற்க முடியாத தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

ஜனநாயக ரீதியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படாததால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பாளர் ஜேஎஸ்கே.சதீஷ்குமார் தெரிவித்தார்.

சங்கத்தில் இருந்து கொண்டு பொதுவெளியில் எதிராக பேசுவது முறையல்ல எனவும், 95 சதவீத ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர்.

தீர்மானத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சில தயாரிப்பாளர்கள் கூறியுள்ளதால், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Musthak
First published:

Tags: Kollywood

அடுத்த செய்தி