ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: கடந்த தேர்தலை விட வாக்குப் பதிவு அதிகம் - ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: கடந்த தேர்தலை விட வாக்குப் பதிவு அதிகம் - ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

கடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை விட இம்முறை அதிக அளவில் வாக்குப் பதிவாகியுள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

2020-22-ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் இன்று சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் உள்ள நிலையில் தலைவர் பதவிக்கு நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் தேனாண்டாள் முரளி ஆகியோர் இரு அணிகளாக போட்டியிட்டனர். தயாரிப்பாளர் தேனப்பன் சுயேச்சையாக தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இத்தேர்தலில் நடிகர்கள் கமல், சசிகுமார், சமுத்திரக்கனி, விமல், சேரன் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.

27 பதவிகளுக்கான இத்தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 4 மணிக்கு முடிவுற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், “மொத்தம் 1,050 வாக்குகள் பதிவாகியுள்ளன. முந்தைய தேர்தலை விட அதிகளவில் வாக்குப் பதிவாகியுள்ளது. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி மாலைக்குள் முடிவு அறிவிக்கப்படும். வாக்கு பெட்டிகள் வைத்து சீல் வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் இரவு முழுவதும் சிசிடிவி கண்காணிப்புடன் 4 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

வாக்கு எண்ணிக்கை ஒளிப்பதிவு செய்யப்படும். ஒரு அணிக்கு இருவர் விகிதம் வாக்கு எணிக்கையின் போதும் வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்திலும் பாதுகாப்பிற்கும் உடனிருப்பர். முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசு அரசாணை வெளியிடும். அதன் பின்னர் தான் புதிய நிர்வாகிகள் குழு அதிகாரத்துக்கு வர முடியும்” என்றார்.

Published by:Sheik Hanifah
First published:

Tags: Tamil cinema Producer council