தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பிரபலங்கள்

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் பெரும் பரபரப்புக்கு பிறகு நடைபெறுகிறது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பிரபலங்கள்
டி.ராஜேந்தர் தலைமையிலான அணி
  • Share this:
விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த வைப்பு நிதியை விதிமுறைகளை மீறி செலவு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் எழுந்த குளறுபடிகளை அடுத்து ஒழுங்கு நடவடிக்கை குழு, தமிழக அரசின் அதிகாரி நியமனம் என அடுத்தடுத்த பரபரப்புக்கு இடையே தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் நடிகர் டி.ராஜேந்தர் தலைமையிலான 'தயாரிப்பாளர் பாதுகாப்பு அணி' பலம்பொருந்திய அணியாக களமிறங்குகிறது. இந்த அணியில் இருந்து செயலாளர் பதவிகளுக்கு இயக்குனர் லிங்குசாமியின் சகோதரரான சுபாஷ் சந்திரபோஸும், தயாரிப்பாளர் மன்னன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இதேபோல துணைத் தலைவர் பதவிகளுக்கு முருகன் மற்றும் நடிகர் விஜய்யின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பிடி செல்வகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே அணியில் இருந்து பொருளாளர் பதவிக்கு தயாரிப்பாளர் ராஜனும் களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இருந்து மனோபாலா உள்ளிட்ட 21 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.


இதேபோல நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரும், மறைந்த ராமநாராயணனின் மகனுமான முரளியின் தலைமையில் 'தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி' களம் இறங்குகிறது. இந்த அணையில் இருந்து செயலாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு சிவசக்தி பாண்டியன் மற்றும் ஆர்கே சுரேஷ் ஆகியோர் களம் அழைக்கப்பட்டுள்ளனர்.

பொருளாளர் பதவிக்கு 'தலைவா' திரைப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் போட்டியிடுகிறார். இந்த அணையில் இருந்தும் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட 21 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இந்த இரு அணிகள் தவிர்த்து தயாரிப்பாளர் தேனப்பன் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதே போல பொருளாளர் பதவிக்கு ஜே.எஸ்.கே.சதீஷ், செயலாளர் பதவிக்கு கதிரேசன் உள்ளிட்டோரும் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர்கள் தவிர இரு குழுக்களாக செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு இரண்டு அணிகள் களம் இறங்குகின்றன.மேலும் படிக்க: விஜய்சேதுபதி பட ஷூட்டிங்கிலிருந்து வெளியேறிய ஸ்ருதிஹாசன்

1,300 வாக்காளர்களை மட்டுமே உள்ளடக்கிய தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெறும் நிர்வாகிகள் அடுத்த இரண்டு ஆண்டுக்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுவார்கள் என்பதால் இந்த தேர்தல் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading