முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தலைநிமிர்ந்த தமிழ் சினிமா.. இதுவரை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட்!

தலைநிமிர்ந்த தமிழ் சினிமா.. இதுவரை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட்!

ஆஸ்கர் படங்கள்

ஆஸ்கர் படங்கள்

மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்தன் முதுகில் ஏறும் வேதாளம் போல் கமல்ஹாசனின் மற்றொரு திரைப்படமும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

  • Last Updated :

சினிமா உலகிற்கு தலைசிறந்த உயர்ந்த விருது என்றால் அது ஆஸ்கார் விருதுதான். அப்படி ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் சினிமாக்களின் தொகுப்பை தற்போது காணலாம்.

திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் கலைஞர்களின் உச்சபட்ச கனவு ஆஸ்கார் விருது. வேற்று மொழித் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் திரைப்படம் அனுப்பப்பட்டு வருகிறது, இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட குழுவொன்றினால் சிறந்த படங்கள் பரிசீலக்கப்பட்டு அதன் பின் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படுகிறது. அவ்வாறு முதன்முதலில் இந்திய அரசால் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது 1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ’தெய்வமகன்’ திரைப்படம். இயக்குநர் திரிலோக்சந்தர் இயக்கத்தில் தந்தை, இரு மகன்கள் என மூன்று வேடங்களில் சிவாஜி நடித்த இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் இருந்து அனுப்பப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

கேங்ஸ்டர் படங்களுக்கு டிரேட் மார்க்கை கொடுத்த திரைப்படம் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ’நாயகன்’ . 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு நாயகனை உலக நாயகனாக்கியது. அதேபோல் அதே மணிரத்னம் இயக்கத்தில் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமான அஞ்சலியும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்திய சினிமா உலகமே வியந்து பார்த்த திரைப்படம் கமல்ஹாசன் மற்றும் சிவாஜிகணேசன் நடிப்பில் உருவான ’தேவர்மகன்’. பரதன் இயக்கத்தில் ஜாதியை மையப்படுத்தி கலவையான விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படப்பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு 1992 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது.\

இதையும் படிங்க.. ஆணுறை விளம்பரம் முதல் கபில் சர்மா ஷோவில் மறுக்கப்பட்டது வரை - சன்னி லியோனின் சர்ச்சைக்குரிய சம்பவங்கள்!

ஆஸ்கார் விருதை வென்றுவிட தீவிரம் காட்டிய கமல்ஹாசனின் மற்றுமொரு திரைப்படமான ‘குருதிப் புனலும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஷங்கர். இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’ அவ்வாண்டின் ஆஸ்கார் விருதுக்கு இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல் மீண்டும் 1998 ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான ‘ஜீன்ஸ்’ திரைப்படமும் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்தன் முதுகில் ஏறும் வேதாளம் போல் கமல்ஹாசனின் மற்றொரு திரைப்படமும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அத்திரைப்படம் கமல்ஹாசனின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளிவந்த ’ ஹேராம்’. ஒரு உண்மை கதையை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த திரைப்படம் ‘விசாரணை’, இந்திய அளவில் பல விருதுகளை வாங்கி குவித்ததுடன் ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியல் வரை சென்றது.

ஒரே மனிதனை வைத்துக்கொண்டு சுவாரசியமான திரைப்படத்தை ரசிக்கும்படி கொடுக்க முடியும் என்பதை இந்திய சினிமாவுக்கு ஒத்த செருப்பு மூலம் உணர்த்தினார் ஆர். பார்த்திபன்.’அந்த படமும் வேற்று மொழி படங்களுக்கான பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதையும் படிங்க.. ஆல்யா மானசாவா? ஷபானாவா? அதிக ரசிகர்கள் வைத்திருக்கும் சீரியல் நடிகைகள் யார்?

காத்திரமான அரசியலை நகைச்சுவையாக சொல்லி கதையின் நாயகனாக யோகிபாபு நடித்திருந்த ’மண்டேலா’ அனைவரின் பாராட்டையும் பெற்று ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதே வரிசையில் ஆஸ்கர் விருதுக்கு நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து எஸ்.வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’. படமும் பரிந்துரைக்கப்பட்டது. இப்படம் ஏழை தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் ஒருநாள் சம்பவங்களை விவரித்தது. 93 நாடுகளில் இருந்து கலந்துகொண்ட 93 படங்களில் இருந்து 15 படங்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதில் ‘கூழாங்கல்’ படம் இடம்பெறவில்லை என்றாலும் ஆஸ்கார் விருது வரை சென்ற கூழாங்கல் ஒரு தங்க கல்லே என மெச்சியது தமிழ் சினிமா வட்டாரம்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Cinema, Kollywood