முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணையும் முன்னணி காமெடி நடிகர்… ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணையும் முன்னணி காமெடி நடிகர்… ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்

ஜெயிலர் படத்தின் அறிவிப்பு போஸ்டர்

ஜெயிலர் படத்தின் அறிவிப்பு போஸ்டர்

Rajini Jailer update : ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த நடிகை பிரியங்கா மோகன் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரஜினி நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் திரைப்படத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் இணைந்துள்ளார். இதனால் ஜெயிலர் திரைப்படம் கூடுதல் சுவாரசியத்துடன் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு கலவை விமர்சனங்களே கிடைத்தன. இருப்பினும், வசூல் ரீதியாக அண்ணாத்த திரைப்படம் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினி ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் இடம்பெற்றுள்ளார். இவருக்கு படத்தில் முக்கியமான கேரக்டர் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - அரசியலில் நுழையும் எந்த எண்ணமும் இல்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த நடிகை பிரியங்கா மோகன் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு ஜெயிலர் படத்தில் இணைந்திருக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. யோகி பாபு நடித்து வரும் படங்களில், அவர் இடம்பெறும் காட்சிகளுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதனால் அவர் தற்போது 10-க்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.

நெல்சன் இயக்கிய கடைசி படமான பீஸ்ட் கலவை விமர்சனங்களை பெற்றதுடன் நெல்சனுக்கு பெரும் நெருக்கடியை அளித்தது.

தமிழகத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் படம்

இந்தப் படம் உருவாகி கொண்டிருக்கும் போதுதான் ரஜினியுடனான படம் அறிவிக்கப்பட்டது. பீஸ்ட் படத்தால் ரஜினி சற்று அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யோகி பாபு படத்தில் இணைந்திருப்பதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தர்பார், அண்ணாத்த படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக ரஜினி படத்தில் இணைகிறார் யோகிபாபு.

First published:

Tags: Nelson dilipkumar, Rajinikanth