ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

10 மாதத்தில் 17 படங்கள்.. அடுத்து ஷாருக்கான்.. தட்டித்தூக்கும் யோகிபாபு!

10 மாதத்தில் 17 படங்கள்.. அடுத்து ஷாருக்கான்.. தட்டித்தூக்கும் யோகிபாபு!

யோகி பாபு - ஷாரூக்கான்

யோகி பாபு - ஷாரூக்கான்

இந்தாண்டு முடிவதற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், கடந்த 10 மாதத்தில் மட்டும் யோகி பாபு நடித்த 17 படங்கள் வெளிவந்துள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஆக்டராக இருக்கும் யோகி பாபு இந்தியில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தில் அறிமுகமாகவுள்ளார்.

  கோலிவுட்டில் முன்னணி காமெடியனாக மாறியிருப்பவர் யோகி பாபு. பாபு என்ற பெயர் கொண்ட இவர், கடந்த 2009-ல் வெளியான அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் அறிமுகமானார். அது முதற்கொண்டு இவர் யோகி பாபு என அழைக்கப்பட்டு வருகிறார்.

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் கால்ஷீட் எளிதாக கிடைத்து விடலாம், ஆனால் யோகி பாபுவின் கால்ஷீட் கிடைப்பது கஷ்டம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு முடிவதற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், கடந்த 10 மாதத்தில் மட்டும் யோகி பாபு நடித்த 17 படங்கள் வெளிவந்துள்ளன.

  விஜய்யின் வாரிசு படத்தில் யோகி பாபு இடம்பெற்றுள்ளார். பீஸ்ட் படத்தில் இருவரின் காமெடி ஒர்க் அவுட் ஆன நிலையில், வாரிசு படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  ''தங்கச்சிக்காக பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன்'' - திருமண விழாவில் உருக்கமாய் பேசிய விஷால்!

  இந்நிலையில் இந்தியில் யோகி பாபு அறிமுகம் ஆகவுள்ளார். இது தொடர்பாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் பரவிய நிலையில், அதனை அவரே உறுதி செய்துள்ளார்.

  ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலமாக பாலிவுட்டில் என்ட்ரி ஆகிறார் யோகி பாபு.

  ஜவான் படத்தின் கதையை, விஜயகாந்த் நடித்த பேரரசு படத்திலிருந்து அட்லீ காப்பி அடித்ததாக கடந்த சில நாட்களாக சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே அவரது ராஜா ராணி, மெர்சல் படங்கள் காப்பி அடிக்கப்பட்டவை என விமர்சனங்கள் வெளிவந்தன. இந்த சூழலில் ஜவான் படத்தின் கதையும் காப்பிதான் என்ற உறுதிபடுத்தப்படாத தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  கே.ஜி.எஃப் 3 ஷூட்டிங் எப்போது தொடங்கும்? அப்டேட்டை வெளியிட்ட ராக்கி பாய் யாஷ்!

  ஜவான் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து சல்மான் கானை அட்லீ இயக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Yogibabu