தமிழ் சினிமாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் : முன்னணி இயக்குநர்கள் வேதனை..!

தமிழ் சினிமாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் : முன்னணி இயக்குநர்கள் வேதனை..!
tamil cinema heroes
  • News18
  • Last Updated: February 14, 2020, 7:58 AM IST
  • Share this:
திரைத்துறையில் தமிழ் மண் வாசனை குறைந்துள்ளதால், தமிழ் சினிமாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என இயக்குநர்கள் வசந்த பாலன், பாரதிராஜா ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவின் 6-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, இயக்குநர்கள் வெற்றிமாறன், அஜயன் பாலா ஆகியோரது முயற்சியில் சென்னை வளசரவாக்கத்தில் பாலு மகேந்திரா பெயரில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திரைப்பட இயக்குநர் பாரதிராஜா திறந்துவைத்தார்.

இந்த விழாவில் இயக்குநர்கள் சீமான், வெற்றிமாறன், வசந்தபாலன், சமுத்திரகனி, அமீர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


விழாவில் பேசிய இயக்குநர் வசந்தபாலன், தமிழ் சினிமா, இணையதள தொடர், குறும்படம் உள்ளிட்ட எதிலும் தமிழ் வாசனை இல்லாத நிலை உள்ளதாக தெரிவித்தார். இதேநிலை தொடர்ந்தால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

இதேபோல, விழாவில் பேசிய பாரதிராஜா, கடந்த சில ஆண்டுகளில் படித்தவர்கள் வந்ததால், தமிழ் சினிமாவின் கலாச்சாரம் மேம்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும், மண் வாசனையும், இனமும் காட்டப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

விழாவில் பேசிய சீமான், தமிழ் சினிமாவில் மண் வாசனை குறைந்து வருவதால் தமிழக அரசு திரைப்பட குழு அமைத்து படம் தயாரிக்க முன்வர வேண்டும் என்றும், இதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading