Home /News /entertainment /

பெரும் தொற்றுக்குப்பின் பீனிக்ஸாக எழும் தமிழ் சினிமா!

பெரும் தொற்றுக்குப்பின் பீனிக்ஸாக எழும் தமிழ் சினிமா!

அஜித்- சூர்யா

அஜித்- சூர்யா

வலிமை திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. அதன் வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று திரையுலகம். கொரோனா முதல் அலையின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்தபோது 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திரையரங்குகள் முழுமையாக மூடப்பட்டன.

அதன்பிறகு நவம்பர் மாதமே மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்களை திரையரங்குகளுக்கு வருவது குறைந்தது. திரைப்பட வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்தது. இரண்டு மாதங்கள் கழித்து 2021 பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் மீண்டும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவைத்தது. 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வசூலை பெற்று திரைப்பட வர்த்தகத்துக்கு நம்பிக்கை அளித்தது.

அதனைத் தொடர்ந்து வெளியான கார்த்தியின் சுல்தான், தனுஷின் கர்ணன் திரைப்படங்கள் அதிக லாபத்தை தந்தன. கர்ணன் படம் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக சென்று கொண்டிருந்த நிலையில் இரண்டாவது அலை உச்சம் பெற ஏப்ரல் மாதம் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டன. திரைப்பட வர்த்தகம் மீண்டும் ஒரு நெருக்கடியை சந்தித்தது. கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்ததும் செப்டம்பர் மாதம் மீண்டும் திரையரங்கள் திறக்கப்பட்டன. பெருமளவில் படங்கள் திரையரங்கில் வெளியாகின.

இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க, இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. இதனால் திரைப்படங்கள் வெளியாவது பெருமளவு குறைந்தது. முக்கியமாக பெரிய பட்ஜெட்டில் தயாரான திரைப்படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளி வைத்தன. 2021 பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்தது போல் 2022 பொங்கலுக்கு வெளியாகவிருந்த வலிமை ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வரும் என அனைவரும் நம்பினர்.

Tamil cinema emerges as a phoenix after Corona pandemic, tamil cinema, tamil cinema padam, tamil cinema news, தமிழ் சினிமா படம், சினிமா நடிகை, தமிழ் சினிமா படம் புது படம், லேட்டஸ்ட் தமிழ் சினிமா செய்திகள் கிசுகிசுக்கள், தமிழ் சினிமா விமர்சனம், valimai, beast, thalapathy vijay, ajith, suriya etharkkum thunindhavan, சூர்யா எதற்கும் துணிந்தவன், வலிமை அஜித், பீஸ்ட் விஜய்

ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. ஜனவரி 26-ம் தேதி வெளியாக வேண்டிய வீரமே வாகை சூடும் திரைப்படமும் அன்றைய தேதியில் வெளியாகவில்லை. இந்நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி முழுநாள் ஊரடங்கு இரண்டையும் கைவிட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் திரைப்படங்கள் முழுவீச்சில் வெளியாக உள்ளன. முதல் திரைப்படமாக பிப்ரவரி 4-ஆம் தேதி விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் திரைக்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து பெப்ரவரி 11ஆம் தேதி விஷ்ணு விஷால் நடித்திருக்கும் எப்ஐஆர் திரைப்படம் திரைக்கு வருகிறது.

Tamil cinema emerges as a phoenix after Corona pandemic, tamil cinema, tamil cinema padam, tamil cinema news, தமிழ் சினிமா படம், சினிமா நடிகை, தமிழ் சினிமா படம் புது படம், லேட்டஸ்ட் தமிழ் சினிமா செய்திகள் கிசுகிசுக்கள், தமிழ் சினிமா விமர்சனம், valimai, beast, thalapathy vijay, ajith, suriya etharkkum thunindhavan, சூர்யா எதற்கும் துணிந்தவன், வலிமை அஜித், பீஸ்ட் விஜய்

விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கியிருக்கும் கடைசி விவசாயி திரைப்படமும் அதே தேதியில் திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என நேற்று அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்களில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் அதே மார்ச் 25 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 4 வெளியாகும் என்று சொல்லப்பட்ட சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. அதேபோல் வலிமை திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. அதன் வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Tamil cinema emerges as a phoenix after Corona pandemic, tamil cinema, tamil cinema padam, tamil cinema news, தமிழ் சினிமா படம், சினிமா நடிகை, தமிழ் சினிமா படம் புது படம், லேட்டஸ்ட் தமிழ் சினிமா செய்திகள் கிசுகிசுக்கள், தமிழ் சினிமா விமர்சனம், valimai, beast, thalapathy vijay, ajith, suriya etharkkum thunindhavan, சூர்யா எதற்கும் துணிந்தவன், வலிமை அஜித், பீஸ்ட் விஜய்

இருபெரும் ஊரடங்குகளை எதிர்கொண்ட தமிழ் சினிமா இந்த மூன்றாவது நெருக்கடியையும் வெற்றிகரமாக சமாளித்து பீனிக்ஸ் பறவையாக மேலெழுந்து வருவதை இந்த வெளியீட்டு தேதிகள் உணர்த்துகின்றன.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி