Home /News /entertainment /

5 திரைப்படங்களுடன் இன்றைய இயக்குனர்களின் கதை முடிந்து விடுகிறது… மூத்த இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் பரபரப்பு பேச்சு

5 திரைப்படங்களுடன் இன்றைய இயக்குனர்களின் கதை முடிந்து விடுகிறது… மூத்த இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் பரபரப்பு பேச்சு

ரஜினியுடன் எஸ்.பி. முத்துராமன்

ரஜினியுடன் எஸ்.பி. முத்துராமன்

நான் ரஜினிகாந்தை வைத்து 25 படங்களையும், கமல்ஹாசனை வைத்து 10 படங்களையும், சிவாஜி கணேசன் வைத்து 3 திரைப்படங்களையும் இயக்கியுள்ளேன். – எஸ்.பி. முத்துராமன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அதிகபட்சம் 5 திரைப்படங்களுடன் இன்றைய இயக்குனர்களின் கதை முடிந்து விடுவதாக கூறியுள்ள மூத்த இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், அதற்கான காரணங்களையும் விவரித்துள்ளார்.

விஜித் நடித்துள்ள டைட்டில் என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பிரபல இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், பேரரசு, நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.பாக்யராஜ், சின்ன திரைப்படங்கள் வெற்றியடைய வேண்டும். அதற்கு தமிழக அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குறிப்பாக நான்கு திரையரங்குகொண்ட மல்டிபிளக்ஸில் ஒரு திரையரங்கை சின்ன படங்களுக்கு தான் ஒதுக்க வேண்டும் என்று சட்டத்தை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். அது போன்ற நிலை ஏற்பட்டால் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் நிச்சயம் வெற்றி அடையும் எனவும் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.



விஜய்யின் திருப்பாச்சி படத்திற்கு முதலில் வேறு டைட்டில்தான் வைத்திருந்தோம்… நினைவுகளை பகிர்ந்த இயக்குனர் பேரரசு

நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்  எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது-

நான் ரஜினிகாந்தை வைத்து 25 படங்களையும், கமல்ஹாசனை வைத்து 10 படங்களையும்,  சிவாஜி கணேசன் வைத்து 3 திரைப்படங்களையும் இயக்கியுள்ளேன். அதேபோல் மற்ற நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளேன்.  மொத்தமாக 70 திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன்.

தனக்கு தானே திருமணம் செய்துகொண்ட டிவி சீரியல் நடிகை… ஆண்களே தேவையில்லை என அறிவிப்பு

ஆனால் இன்றைய இயக்குனர்கள் நான்கு,  ஐந்து திரைப்படங்களோடு நிறுத்திக் கொள்கின்றனர். அத்துடன் அவர்கள் கதை முடிந்துவிடுகிறது.  அதற்கு காரணம் அவர்கள் எழுதுவது குறைவாக உள்ளது.  மேலும் அவர்களுக்கு சொற்றொடரை எழுத தெரியவில்லை

எனவே,  தற்போது வரும் இயக்குனர்கள் எங்களை மிஞ்சி திரைப்படங்களை எடுக்க வேண்டும். 80 படங்கள், 100 படங்கள் என அவர்கள் சாதனை படைக்க வேண்டும்.  அதற்கு அவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Published by:Musthak
First published:

Tags: Kollywood

அடுத்த செய்தி