• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • MK Stalin: முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு திரை நட்சத்திரங்கள் வாழ்த்து!

MK Stalin: முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு திரை நட்சத்திரங்கள் வாழ்த்து!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

50 வருடம் அரசியலில் இருந்தாலும், இப்போது தான் முதல் முறையாக அரியணை ஏறவிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்திருக்கும் திமுக-வுக்கும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் திரைப்பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெற்றது. இதில் திமுக - காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளுடனும், அதிமுக - பாஜகவுடனும் களம் கண்டன. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது திமுக. அதோடு 25 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. 50 வருடம் அரசியலில் இருந்தாலும், இப்போது தான் முதல் முறையாக அரியணை ஏறவிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதையடுத்து அவருக்கு தமிழ் சினிமா திரைப்பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    அதில் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

    "வெற்றி பெற்றுள்ள எங்கள் புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்
    உதயநிதி ஸ்டாலின் ப்ரோ. இந்த கடினமான காலங்களில் உங்கள் நிர்வாகத்தை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மற்றும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்” என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.



    "மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம், கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து, மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்!” என நடிகர் கார்த்தி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



    ”மக்களின் பேராதரவுடன் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்று மக்கள் பணியில் சாதனை படைக்க இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்” என நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.



    "எங்கள் புதிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். சிங்கரா தமிழ்நாடு (உங்கள் தலைமையின் கீழ் சிங்காரா சென்னை பிறந்த விதம்) உருவாக வேண்டும். மற்றும் எனது சகோதரர் உதயநிதி ஸ்டாலின், முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக ஆனதற்கு வாழ்த்துக்கள்” என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.



    ”தமிழக தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் அய்யா அவர்களுக்கும், தன் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் சாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.



    "40 வருட கடின உழைப்பிற்கும், பொறுமைக்கும் பலனாக 6 வது முறை தி.மு.க சார்பில் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.



    ”தனிப்பெரும் வெற்றி பெற்ற முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு வணக்கம். மக்கள் பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்” என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.



    ”தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான, தங்களது தெளிவான நம்பிக்கையான தங்களை
    தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! சாதி மத வேறுபாடுகளை கடந்து சமூக நீதியை நிலை நாட்ட தங்களது தலைமையிலான ஆட்சியில் சமரசமற்ற முன்னெடுப்புகள் அமைய வாழ்த்துகள்!" என இயக்குநர் பா.ரஞ்சித் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



    ”அவசியம் அறிந்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திகாட்டியிருக்கும் தமிழக மக்களுக்கு அன்பும் நன்றியும். தமிழகத்தின் நம்பிக்கை முதல்வராக பொறுப்பேற்கும் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்” என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: