Home » News » Entertainment » CINEMA TAMIL CINEMA ACTRESS TIKTOK VIDEO LOCK DOWN TIME MSB

த்ரிஷா டூ சன்னி லியோன்...! ஊரடங்கு நாளில் டிக்டாக் வீடியோ வெளியிட்ட நடிகைகள்!

த்ரிஷா டூ சன்னி லியோன்...! ஊரடங்கு நாளில் டிக்டாக் வீடியோ வெளியிட்ட நடிகைகள்!
  • Share this:
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் நடிகைகள் சமையல் கலை நிபுணர்களாகவும் டிக்டாக் ராணிகளாகவும் மாறி வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

ஊரடங்கு நாட்களை தனது தோழிகளுடன் கழித்துவரும் த்ரிஷா, அவர்களுடன் கலகலப்பாக நடனமாடும் டிக் டாக் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.




 




View this post on Instagram




 

Trisha on TikTok 😍🥰🤗 #trishakrishnan #trishaafp


A post shared by Trisha Krishnan 💖 (@trishaa.fp) on





இந்த பொழுதை தனது கணவருடனும் குழந்தைகளுடனும் கழித்துவரும் நடிகை சன்னி லியோன், அவர்களுடன் சேர்ந்து டிக் டாக் வீடியோக்கள் செய்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார்.



 




View this post on Instagram




 

Kiss kiss!! Morning everyone!


A post shared by Sunny Leone (@sunnyleone) on











இதேபோல் நடிகை சிம்ரனும் தனது மகனுடன் விளையாட்டாய் எடுத்துகொண்ட டிக் டாக் வீடியோக்களை தொடர்ந்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்



 




View this post on Instagram




 

#staysafe #stayhealthy #familytime 😊❤️😊


A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on





பாடிய வாயும் ஆடிய கால்களும் சும்மா இருக்காது என்பதை உணர்த்தும் விதமாக ரித்திகா சிங், சம்யுக்தா, மீரா மிதுன் போன்ற

நடிகைகள் வீட்டில் இருந்தபடியே நடனமாடும் வீடியோக்களை ரசிகர்களின் பார்வைக்கு பகிர்ந்து வருகின்றனர்.






 




View this post on Instagram




 

DILBAR •BELLY DANCING• Lockdown day 8 . . . #dancerlife #nomakeup #somethingswithsam #everydayda #noedit #bellydance #dance


A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on









இது ஒருபக்கம் என்றால் இன்னும் சில நடிகைகள் சமையல் கலை நிபுணர்களாக மாறி, ரசிகர்களுக்கு சமையல் டிப்ஸ் கொடுத்த வண்ணம் உள்ளனர். ப்ரெட், நட்ஸ், பழங்கள் ஆகியவற்றை கொண்டு ஆரோக்கியமான காலை உணவை தயாரிப்பது எப்படி என்பதை நடிகை தமன்னா வீடியோவின் மூலம் தன் ரசிகர்களுக்கு விளக்கியுள்ளார்.



நடிகை ஸ்ருதி ஹாசனும் வீட்டில் இருந்தபடியே சுவையான ஐஸ் க்ரீம்,  சாண்ட்விச் தயாரிப்பது எப்படி என்பதை தன் வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



திருமணமான நடிகைகளான ஸ்ரேயா, ஜெனிலியா ஆகியோர் தங்கள் கணவன்மார்களுக்கு பாத்திரம் துலக்கும் பொறுப்பை வழங்கியிருப்பதுடன் இதேபோல் சக நடிகைகளும் அந்த பொறுப்பை கணவர்களுக்கு வழங்க வேண்டும் என வேடிக்கையாக கோரிக்கை வைத்துள்ளனர்.






 




View this post on Instagram




 

Happy Birthday Dearest @ajaydevgn Some isolation humour with @geneliad on one of your songs- have a great one my brother


A post shared by Riteish Deshmukh (@riteishd) on




First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading