பிரபல இயக்குநரும் நடிகருமான ராஜசேகர் திடீர் மரணம்!

rajasekar died | இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராக வலம் வந்த இவர், சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து வந்தார்

பிரபல இயக்குநரும் நடிகருமான ராஜசேகர் திடீர் மரணம்!
இயக்குநர், நடிகர் - ராஜசேகர்
  • News18
  • Last Updated: September 8, 2019, 12:47 PM IST
  • Share this:
இயக்குநரும் நடிகருமான ராஜசேகர் இன்று காலமானார்.

பாரதிராஜா இயக்கத்தில் நிழல்கள் படத்தில் ஹீரோவாக நடித்தவர் ராஜசேகர். அந்தப் படத்தில் இடம் பெற்ற இது ஒரு பொன்மாலைப்பொழுது என்ற பாடலும் இவருக்கான அடையாளங்களுள் ஒன்று.

இவரது நண்பர் ராபர்ட் உடன் இணைந்து பாலைவனச் சோலை' 'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' ஆகிய படங்களை இயக்கி ராபர்ட் - ராஜசேகர் என்ற இரட்டை இயக்குநர்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்தனர்.


இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராக வலம் வந்த இவர், சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து வந்தார். மேலும் சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்தார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைபாட்டால், ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், சின்னத்திரை கலைஞர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ பார்க்க: நாசாவிற்கு செல்லும் மதுரை டீக்கடைக்காரரின் மகள்!

Loading...

First published: September 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...