மும்பைக்கு சப்போர்ட் செய்த விஜய் ரசிகருக்கு பதிலளித்த நடிகை!

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான முதல் பிளே ஆஃப் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி

மும்பைக்கு சப்போர்ட் செய்த விஜய் ரசிகருக்கு பதிலளித்த நடிகை!
விஜயலட்சுமி
  • News18
  • Last Updated: May 8, 2019, 2:12 PM IST
  • Share this:
மும்பை அணிக்கு ஆதரவாக ரசிகர் ட்விட்டரில் பதிவிட்ட பதிவுக்கு நடிகை விஜயலட்சுமி பதிலளித்துள்ளார்.

சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான முதல் பிளே ஆஃப் சுற்று நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து ட்விட்டரில் ரசிகர் ஒருவர் மும்பை அணிக்கு ஆதரவாக ‘கிளம்பு கிளம்பு, ஃபைனலுக்கு வந்தாலும் அடி தான் வாங்க போறீங்க’ என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு நடிகை விஜயலட்சுமி பதில் அளித்துள்ளார்.


அந்த பதிவுக்கு நடிகை விஜயலட்சுமி, ‘அட பாவி, தமிழ் பேசுற, தளபதி சூர்யான்னு சொல்ற. மும்பை இண்டியன்ஸ் ரசிகரா. ஃபைனலுக்கு வந்துட்டு பேசுவோம் நாங்க. அதுவரைக்கும் நீங்க சத்தமா பேசிகோங்க’ என்று பதிலளித்துள்ளார்.அவருடைய பதிவுக்கு சென்னை ரசிகர்கள் ஆதரவாகவும், மும்பை ரசிகர்கள் எதிராகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையடுத்து நடிகை விஜயலட்சுமி, ‘ எனக்கு அறிவுரை சொன்ன எல்லா கிரிக்கெட் ரசிகரிகளுக்கும் நான் சொல்வது என்ன வென்றால், நீங்க கிரிக்கெட் பத்தி தெரிஞ்சு வைச்சுக்கோங்க, எனக்கு தோனி பத்தி மட்டும் தெரிஞ்சா போதும். என்ன சொல்ல வர்றேன்னா, ஆணி இருக்கற இடத்துல இருக்கட்டும், நீங்க போய் தூங்குங்க’ என்று மீண்டும் பதிவிட்டுள்ளார்Also watch

First published: May 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்