முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மழை பிடிக்காத மனிதன் படத்தில் கன்னட நடிகருக்கு டப்பிங் பேசிய நகுல்

மழை பிடிக்காத மனிதன் படத்தில் கன்னட நடிகருக்கு டப்பிங் பேசிய நகுல்

கன்னட நடிகருக்கு டப்பிங் பேசிய நகுல்

கன்னட நடிகருக்கு டப்பிங் பேசிய நகுல்

கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள, கடுகு உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

  • Last Updated :

விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்தில் கன்னட நடிகருக்கு தமிழ் நடிகர் நகுல் டப்பிங் பேசியுள்ளார்.

கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள, கடுகு உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

அதில் மேகா ஆகாஷ் நாயகியாகவும், கன்னட நடிகர் பிருத்வி அம்பர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அந்தப் படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கி உள்ளது. அதில் கன்னட நடிகர்பிருத்வி அம்பருக்கு, தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான நகுல் டப்பிங் பேசியுள்ளார்.

பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழில் நடிகராக அறிமுகமான நகுல் காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

அதேசமயம் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றுள்ளர். மேலும் தற்போது சில திரைப்படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் நடித்துள்ள கன்னட நடிகர் பிருத்வி அம்பருக்கு குரல் கொடுத்துள்ளார்.

Also read... சூர்யா நான் நினைத்ததைவிட மேண்மையானவர் - நடிகை கீர்த்தி ஷெட்டி!

அவர் இதுவரை தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தவிர வேறு எந்த கதாபாத்திரத்திற்கும் குரல் கொடுக்கவில்லை முதன்முறையாக கன்னட நடிகர் பிரதீவ் நம்பருக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், பிருத்வி அம்பர் தவிர, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இதற்கான டீசர் மற்றும் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Nakul, Vijay Antony