முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'ஜெயிலர்' படப்பிடிப்பில் ரஜினிகாந்த்துடன் இணைந்த தமன்னா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'ஜெயிலர்' படப்பிடிப்பில் ரஜினிகாந்த்துடன் இணைந்த தமன்னா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமன்னா - ரஜினிகாந்த்

தமன்னா - ரஜினிகாந்த்

தமன்னா இந்தப் படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறாரா அல்லது வேறு முக்கியமான வேடத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து வருவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

பீஸ்ட் படம் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை என்பதால் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் இயக்குநர் நெல்சன் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதுபோலவே அண்ணாத்த படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. கூடவே பத்திரிகையாளர் பிஸ்மி, விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார் என கொளுத்திப்போட இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர். ஜெயிலர் படத்தின் மூலம் நான் தான் எப்பொழுதும் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினிகாந்த் நிரூபிப்பார் என அவரது ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கிய 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு 50% அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நெல்சனின் முந்தைய படங்களை விட ஜெயிலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் தமன்னா நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து தமன்னா இந்தப் படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறாரா அல்லது வேறு முக்கியமான வேடத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பேட்ட, தர்பார் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரஜினிகாந்த் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என நெல்சன் - அனிருத் காம்போவில் வெளியான பாடல்கள் ரசிகர்களைப் பெரிதாக கவர்ந்திருக்கின்றன. இதனால் ஜெயிலர் படத்தின் பாடல்களுக்காக ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

First published:

Tags: Rajinikanth, Tamannaah bhatia