பிகிலுடன் மோதும் தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’

பிகிலுடன் மோதும் தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’
பெட்ரோமாக்ஸ்
  • News18
  • Last Updated: September 18, 2019, 7:48 PM IST
  • Share this:
தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள பெட்ரோமாக்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமன்னா நடிப்பில் அதே கண்கள் பட இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கும் படம் பெட்ரோமாக்ஸ். இந்தப் படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் என பலமான நகைச்சுவை தமன்னாவுடன் இணைந்துள்ளது. இவர்களுடன் பேபி மோனிகா, ஸ்ரீஜா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படம் தெலுங்கில் டாப்ஸி, வெண்ணிலா கபடி குழு கிஷோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘அனந்தோ பிரம்மா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிறது.




படத்தின் பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், படத்தை தீபவாளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய இரண்டு படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் திரைப்படமும் இணைந்துள்ளது.



வீடியோ பார்க்க: கோவிலில் பூஜை செய்யும் திருநங்கை

First published: September 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading