தமன்னா - யோகி பாபு நடிக்கும் 'பெட்ரோமாக்ஸ்' - வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்!

news18
Updated: July 19, 2019, 5:05 PM IST
தமன்னா - யோகி பாபு நடிக்கும் 'பெட்ரோமாக்ஸ்' - வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகை தமன்னா
news18
Updated: July 19, 2019, 5:05 PM IST
தமன்னா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, த்ரிஷா, அஞ்சலி உள்ளிட்ட பலரும் த்ரில்லர் கதைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் நடிகை தமன்னாவும் திகில் கலந்த நகைச்சுவை கதையில் நடித்து வருகிறார்.

அதே கண்கள் இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். பெட்ரோமாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் என பலமான நகைச்சுவை தமன்னாவுடன் இணைந்துள்ளது. இவர்களுடன் பேபி மோனிகா, ஸ்ரீஜா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது பிரச்னை இருக்கும். அதை தீர்க்கும் நோக்கில் ஒவ்வொருவராக இணைந்து இறுதியில் ஒரு பலமான கூட்டணியாக சேர்ந்து தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த பிரச்னை தீர்ந்ததா, பிரச்னைகளுக்கு காரணம் யார், அதை எப்படி வெற்றி கொண்டார்கள் என்பதை நகைச்சுவையும், திகிலும் கலந்த ஜனரஞ்சகமாக படமாக்கியுள்ளார் இயக்குநர் ரோகின்.ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.ஆர்.கோபிநாத் வசனம் எழுதியுள்ளார்.

வீடியோ பார்க்க: அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் கமல்

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...