ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திருமணத்துக்கு தயாராகும் தமன்னா?

திருமணத்துக்கு தயாராகும் தமன்னா?

தமன்னா

தமன்னா

தமன்னா பாட்டியா கடைசியாக ப்ளான் ஏ பிளான் பி படத்தில் நடித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை தமன்னா மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மணக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவர் தமன்னா பாட்டியா. தற்போது அவர் தனது வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் நுழையத் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. அதாவது தமன்னா விரைவில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இவர்களது திருமணம் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

  தற்போது தமன்னாவின் முறை. இறுதியாக அவர் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மும்பையைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபர் தமன்னாவுக்கு புரொபோஸ் செய்துள்ளாராம். இறுதியாக தமன்னா அவருக்கு ஓகே சொன்னதாக தெரிகிறது.

  முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய உதயநிதி... முடிவை மாற்றிய கமல் ஹாசன்!

  தமன்னா பாட்டியா கடைசியாக ப்ளான் ஏ பிளான் பி படத்தில் நடித்தார். சிரஞ்சீவியின் போலா ஷங்கர், போலே சூடியன், குர்துண்டா சீதகாலம் மற்றும் பாந்த்ரா ஆகிய படங்கள் தமன்னாவின் கைவசம் உள்ளன. அதோடு அமேசான் பிரைம் வீடியோ தொடரான ஜீ கர்தாவின் வெளியீட்டிற்காக அவர் காத்திருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Tamannaah bhatia