Home /News /entertainment /

போதை ஆசாமிகளை டீல் செய்யும் பவுன்சராக தமன்னா!

போதை ஆசாமிகளை டீல் செய்யும் பவுன்சராக தமன்னா!

தமன்னா

தமன்னா

இதுவரை ஆண் பவுன்சர்கள் குறித்தே நாம் கேள்விப்பட்டிருப்போம். இப்பொழுது பெண் பவுன்சர்களும் அதிக அளவில் உருவாக ஆரம்பித்துள்ளனர்.

தமன்னா தனது புதிய திரைப்படத்தில் பெண் பவுன்சராக நடிக்கிறார். பவுன்சர் நகரம் என அழைக்கப்படும் அசோலா ஃபதேபூரை பின்னணியாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்படுகிறது.

இந்தியின் குறிப்பிடத் தகுந்த இயக்குனரான மதூர் பண்டார்கரின் புதிய திரைப்படம் பாப்லி பவுன்சரில் தமன்னா நடிக்கிறார் என சில தினங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தப் படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

டெல்லியின் புறநகரில் அமைந்திருக்கும்  கிராமம் அசோலா ஃபதேபூர். இந்த கிராமத்தில் உள்ள கட்டுமஸ்தான இளைஞர்கள்தான் டெல்லி உள்ளிட்ட பல முக்கியமான நகரங்களில் பவுன்சர்களாக பணியாற்றி வருகிறார்கள். பவுன்சர் நகரம் என தி நியூயார்க் டைம்ஸ் இந்த கிராமத்தை குறித்த செய்தியை வெளியிட்டிருந்தது முக்கியமானது.  பவுன்சர்களின் பிறப்பிடம் என அசோலா ஃபதேபூர் கூறப்படுகிறது. இந்த கிராமத்தின் பின்னணியில் பெண் பவுன்சர் ஒருவரின் கதையை கூறுவதுதான் பாப்லி பவுன்சர் திரைப்படத்தின் கதை என்கிறhர்கள்.

இதுகுறித்து பேசியிருக்கும் பண்டார்கர், "ஒரு திரைப்பட இயக்குனராக இதுவரை சொல்லாத ஒரு கதையை இந்த படத்தின் மூலமாக சொல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஒரு பெண் பவுன்சரின் வாழ்க்கையை நகைச்சுவையோடு சித்தரிக்க விரும்புகிறேன். அதேநேரம் நம் மனதை விட்டு நீங்காத நெடிய தாக்கத்தையும் இந்தப்படம் நமக்குள் விளைவிக்கும். இது ஒரு அற்புதமான கதை. தமன்னா தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் என நம்புகிறேன்" என அவர் கூறியுள்ளார்.

இந்தப் படத்தின் கதையை மதூர் பண்டார்கர் தமன்னாவிடம் கூறியதும் அவர் உற்சாகமாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். "பெண்களை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் வல்லவர் மதூர் பண்டார்கர். பாப்லி பவுன்சர்  அது போன்ற ஒரு வலிமையான கதாபாத்திரத்தை கொண்ட திரைப்படம். அந்த கதாபாத்திரத்தின் குரலை நான் ஒலிக்கப் போகிறேன் எனும் போது உற்சாகமாக உள்ளது. இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தையும் விட இது உற்சாகமும், கேளிக்கையும்  கொண்ட கதாபாத்திரமாகும்" என தமன்னா கூறியுள்ளார்.

ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இதுவரை ஆண் பவுன்சர்கள் குறித்தே நாம் கேள்விப்பட்டிருப்போம். இப்பொழுது பெண் பவுன்சர்களும் அதிக அளவில் உருவாக ஆரம்பித்துள்ளனர். டெல்லியில் உள்ள கிளப் ஒன்றில் பவுன்சராக பணியாற்றி வரும் மெக்ருன்னிசா சோகட்அலி  இந்தியாவின் முதல் தொழில்முறை பெண் பவுன்சராக கருதப்படுகிறார். ஆச்சாரமான முஸ்லிம் குடும்பத்தில் இருந்து வந்தவர் இவர். இவரது சகோதரிகளில் ஒருவரும் பவுன்சராக இருக்கிறார். போதையில் கலாட்டா செய்யும் ஆசாமிகளை தூக்கி வெளியே வீசுவது மட்டுமல்ல, ஒரு பார்ட்டியை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடத்துவதிலும் பவுன்சர்களின் பங்களிப்பு உள்ளது எனக் கூறுகிறார் இவர்.

அஜித் படத்தை ஒதுக்கும் முன்னணி தொலைக்காட்சி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆண், பெண் பேதமில்லாமல் யார் பிரச்சனை செய்தாலும் வெளியே தள்ளிவிடுவது இவரது ஸ்பெஷாலிட்டி. நடிகை தமன்னாவும் இவரை போன்ற ஒரு கதாபாத்திரத்தில் தான் பாப்லி பவுன்சர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த வகையில் இது முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம் என்பதில் சந்தேகமில்லை.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamannaah bhatia

அடுத்த செய்தி