நடிகைகள் அதிக சம்பளம் வாங்கக்கூடாதா? தமன்னா காட்டம்

”திரைத்துறையில் ஒருவராக நடிகைகளும் இந்தநிலையை அடைய கடினமாக உழைக்கிறோம்”

நடிகைகள் அதிக சம்பளம் வாங்கக்கூடாதா? தமன்னா காட்டம்
நடிகை தமன்னா
  • News18
  • Last Updated: May 20, 2020, 6:11 PM IST
  • Share this:
சம்பள சர்ச்சை குறித்து நடிகை தமன்னா காட்டமாக விளக்கமளித்துள்ளார்.

முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவிடம் ரவி தேஜாவிடம் நடிக்கக் கேட்டு தயாரிப்பு நிறுவனம் அணுகியதாகவும், அவர் கேட்ட அதிக சம்பளத்தை தர மறுத்ததால் அந்தப் படத்தில் தமன்னா நடிக்க மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் நடிகை தமன்னா, இதைப்போன்ற கற்பனையான கதைகளில் உண்மையில்லை. பிப்ரவரி மாதம் எனது மேலாளரை தயாரிப்பு தரப்பு அணுகியது, ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தயாரிப்பு நிறுவனமே மேற்கொண்டு பேச்சுவார்த்தையை நிறுத்தியது. சரியான பாதுகாப்பு முறைகள் அமலில் வரும் வரை எந்த தயாரிப்பு நிறுவனமும் தற்போது ஷூட்டிங் செல்வதாக எனக்குத் தெரியவில்லை.


எனது சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் நான் தொழில்முறை கண்ணியத்தைக் காப்பேன். ரவிதேஜாவிடம் எனக்கிருக்கும் நட்பை வைத்து பார்த்தால் அவர் படத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை.

சம்பளம் என்று வரும்போது அது அந்தந்த நடிகரின் தனிப்பட்ட முடிவு. கொடுக்கும் சம்பளத்தை சமரசம் செய்து கொள்வதும், செய்யாமல் போவதும் அவரவர் விருப்பம். எப்போதுமே சம்பளத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்பது போன்ற ஒருதலைபட்சமான முடிவுகளை நாம் அழிக்க வேண்டும்.

இதே கேள்விகள் நடிகரிடம் கேட்பதில்லை. திரைத்துறையில் ஒருவராக நடிகைகளும் இந்தநிலையை அடைய கடினமாக உழைக்கிறோம். ஒவ்வொரு படத்துக்கும் ஹீரோவைப் போல் ஹீரோயினும் தேவை. அதிக சம்பளம் பெற்றவர் என்ற பட்டம் ஏன் நடிகைகளுக்கு கிடைக்கக்கூடாது? அந்த உரிமை ஆண்களுக்கு மட்டும் தானா?” என்று தமன்னா கூறியுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading