மலையேற்றம் சென்றாரா தமன்னா? சர்ச்சையான புகைப்படம்

மும்பையில் தனது பெற்றோருடன் வசித்து வரும் தமன்னா முதுகில் ஒரு பையுடன் காட்டுக்குள் நடந்து செல்வது போல் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலையேற்றம் சென்றாரா தமன்னா? சர்ச்சையான புகைப்படம்
காட்டுக்குள் பையுடன் எங்கே செல்கிறார் தமன்னா?
  • Share this:
கொரோனா தாக்கம் காரணமாக அனைவரும் வீட்டில் அடங்கியுள்ள நிலையில் நடிகை தமன்னா மலையேற்றம் செய்வது போல் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், இயற்கையில் தொலைந்து போங்கள், உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள் என பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னர் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டாரா ? இல்லை மலையேற்றம் செய்த புகைப்படத்தை பதிவிட்டாரா என சிலர் கேள்விஎழுப்பியுள்ளனர்.

 
ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட திரைப்பலங்கள் கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் மீன்பிடித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை அடுத்து, விமல் மற்றும் சூரி உள்ளிட்டோருக்கு தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் இருக்குமாறு அரசு அறிவுறுத்திவரும் நிலையில் நடிகர், நடிகைகள் இவ்விதம் வெளியில் சுற்றுவது சர்ச்சையாகி வருகின்றது.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading