இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்குப் பதிலாக தமன்னா நடிப்பார் என்றே இதுவரை கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் த்ரிஷாவும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இந்தியன் 2 படம் ஆரம்பிக்கும் போதே பட்ஜெட் சார்ந்து இயக்குனர் ஷங்கருக்கும், தயாரிப்புத் தரப்புக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான நிகழ்வில் பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டது விரிசலை மேலும் அதிகப்படுத்தி இறுதியில் ஷங்கர் படப்பிடிப்பை பாதியில் நிறுத்துவதில் முடிந்தது. இப்போது பஞ்சாயத்து பேசி ஒருவழியாக சாமாதானமான நிலையில் நாயகி காஜல் அகர்வால் வடிவில் அடுத்தப் பிரச்சனை.
காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவரை நடிக்க வைக்க முடியாத நிலை. அவரை மாற்றிவிட்டு தமன்னாவை நடிக்க வைப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
காஜல் அகர்வால் ஒரு வார காலம் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அப்படியே நீக்கிவிட்டு தமன்னாவை வைத்து புதிதாக எடுப்பதாக திட்டம்.
இந்நிலையில் தமன்னாவுக்கு போட்டியாக இப்போது த்ரிஷாவின் பெயரும் அடிபடுகிறது. பொன்னியின் செல்வனில் த்ரிஷாவின் நடிப்பு அட்டகாசம் என்று பலர் செய்திகள் வேறு போட ஆரம்பித்துள்ளனர்.
இந்தியன் 2-ல் எப்படியும் இடம் பிடித்துவிட வேண்டும் என்று த்ரிஷா நினைப்பதன் எதிரொலியே இவ்வகைச் செய்திகள் என்கிறார்கள். த்ரிஷா ஏற்கனவே கமலுடன் மன்மதன் அம்பு படத்தில் நடித்திருப்பதால் அவருக்கு வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க -
ஜெயில் படத்தை ஓடிடியில் வெளியிட மத்தியஸ்த தீர்ப்பாயத்தின் அனுமதி பெற வேண்டும்: உயர்நீதிமன்றம்
ஷங்கர் தற்போது ராம் சரண் படத்தில் பிஸியாக இருக்கிறார். அதனால் அடுத்த வருடமே இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்படும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.