தமிழ் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவி ஜோடியாக தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். வெப் தொடர்களிலும் தமன்னா கவனம் செலுத்தி வருகிறார்.
வாழை இலையில் சாப்பிடும் போது கடவுள் போல் உணர்கிறேன் என்று வாழை இலையில் சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை தமன்னா.
சாதாரணர்கள் சகஜமாக செய்யும் விஷயங்களை பிரபலங்கள் எப்போதாவது செய்கையில், அவர்களுக்கு அது அதிசயமாகத் தோன்றும். தமிழ்நாட்டில் பெரும்பாலான கையேந்தி பவன்களிலும் வாழை இலையில்தான் உணவு பரிமாறுகிறார்கள். தினம் லட்சக்கணக்கானவர்கள் வாழையிலையில் சாப்பிடுகிறார்கள்.
தமன்னா அதிசயமாக ஒருநாள் இலையில் சாப்பிட்டிருப்பார் போல. தலையில் கிரீடம், கழுத்தில், கைகளில் ;ஆபரணங்கள் என அம்மன் வேஷத்தில் இலையில் சாப்பிடும் புகைப்படத்தை தமன்னா பகிர்ந்துள்ளார்.
அத்துடன் வாழை இலையில் சாப்பிடும் போது கடவுள்போல் உணர்கிறேன். எளிதானது, சுற்றுச்சூழலுக்கு நல்லது. காலம் பழைய நிலைக்கு செல்கிறது என்று பதிவிட்டுள்ளார்.வாழையிலையில் இத்தனை மகத்துவங்களா?
தமன்னா கடைசியாக தமிழில் ஆக்ஷன் படத்தில் நடித்தார். 2019 இல் அந்தப் படம் வெளியானது. அதற்குப் பிறகு எந்தத் தமிழ்ப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. அதேநேரம் இந்தி, தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறார்.
தமிழ் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவி ஜோடியாக தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். வெப் தொடர்களிலும் தமன்னா கவனம் செலுத்தி வருகிறார். அவர் பகிர்ந்திருக்கும் இந்த அம்மன் கெட்டப் எந்தப் படத்துக்கானது என்பது தெரியவில்லை.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.