தமன்னா திருமணம் செய்து கொள்ளப் போவதாக இரு தினங்கள் முன்பு இணையத்தில் செய்தி ஒன்று வைரலானது. அதற்கு பதிலடி தந்துள்ளார் தமன்னா.
நடிகைகளின் கரியர் கிராஃப் இறங்கும் போது, அவர்கள் திருமணம் செய்யப் போவதாக வதந்தி கிளம்புவது வாடிக்கை. தமன்னாவின் மார்க்கெட்டும் தற்போது டல்லடிப்பதால், அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதற்கு தமன்னா பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - பிரச்னைக்கு தீர்வு காண்பார்களா?
"இப்போது
திருமணம் செய்யும் மனநிலை எனக்கு இல்லை" என்று கூறியிருப்பவர், "என்னுடைய கரியர் இப்போதுதான் பிரமாதமாக செல்கிறது. அதை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை" எனவும் கூறியுள்ளார். தமன்னா தற்போது தெலுங்கில் இரு படங்களை முடித்துள்ளார். சிரஞ்சீவி ஜோடியாக போலா சங்கர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக். இவை தவிர இரு கன்னடப் படங்களில் நடிக்கவும் புதிதாக ஒப்பந்தமாகியுள்ளார். இவை தவிர பிளான் ஏ பிளான் பி இந்திப் படமும் அவரது நடிப்பில் வெளிவர உள்ளது.
காதலுக்கு மரியாதை போல ஃபீல் குட் படமாக தளபதி 66 - கதையைக் கேட்டு விஜய் சொன்ன அந்த விஷயம்!
தமிழில் 2019-ல் வெளியான ஆக்ஷன்
திரைப்படம் தான் அவர் நடித்த கடைசிப் படம். சென்ற வருடம் நவம்பர் ஸ்டோரி வெப் தொடரில் நடித்தார். இந்த வருடம் மேலும் சில வெப் தொடர்களிலும் அவர் நடிக்க திட்டமிட்டுள்ளார். தமிழில் அவருக்கு படம் இல்லையே தவிர, தெலுங்கு, கன்னடம், இந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். விரைவில் தமிழிலும் அவர் நடிப்பார் என்கின்றன செய்திகள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.