Home /News /entertainment /

‘ஒரு நாள் ஓய்வெடுத்து, பிறந்த நாளை கொண்டாடுங்கள்’ – மோடிக்கு வாழ்த்துச் சொன்ன நடிகர் ஷாரூக்கான்

‘ஒரு நாள் ஓய்வெடுத்து, பிறந்த நாளை கொண்டாடுங்கள்’ – மோடிக்கு வாழ்த்துச் சொன்ன நடிகர் ஷாரூக்கான்

ஷாரூக் மற்றும் ஆமிர் கானுடன் பிரதமர் மோடி, (File Photo)

ஷாரூக் மற்றும் ஆமிர் கானுடன் பிரதமர் மோடி, (File Photo)

இந்தி நடிகர்கள் அக்சய் குமார், சல்மான் கான், அஜய் தேவ்கன், சன்னி தியோல் உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் கூறியுள்ள வாழ்த்துச் செய்தி வைரலாகியுள்ளது. ஒரு நாள் ஓய்வெடுத்து பிறந்த நாளை கொண்டாடுங்கள் என்று மோடியை ஷாரூக்கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

    பிரதமர் மோடி இன்று தனது 72ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி உலக நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள், திரைத்துறையினர், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் மோடிக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். இந்நிலையில், மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இந்தி நடிகர் ஷாரூக்கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.



    ஷாரூக்கான் தனது ட்விட்டர் பதிவில், ‘நாட்டின்நலனுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறார். இது மிகவும் பாராட்டத்தக்கதாகும். அவரது இலக்குகளை அவர் அடைவதற்கான சக்தியையும், உடல் நலத்தையும் பெற வாழ்த்துகிறேன். ஒரு நாள் ஓய்வெடுத்து உங்களது பிறந்த நாளை கொண்டாடுங்க மோடி சார். ஹேப்பி பர்த்டே’ என்று கூறியுள்ளார்.









    இதேபோன்று இந்தி நடிகர்கள் அக்சய் குமார், சல்மான் கான், அஜய் தேவ்கன், சன்னி தியோல் உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
    Published by:Musthak
    First published:

    Tags: Modi Birthday, PM Narendra Modi, Shah rukh khan

    அடுத்த செய்தி