பிரபல தபேலா இசைக்கலைஞர் பிரசாத் வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு காலமானார்.
சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், இந்தி, தெலுங்கு என புகழ்ப்பெற்ற 4 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர் தபேலா இசைக்கலைஞர் பிரசாத். இவரது தபேலா இசைக்காகவே பல பாடல்கள் ஹிட்டடித்தன.
வட இந்தியாவில் R.D.பர்மன், சி.ராமசந்திரா, லஷ்மி காந்த் பியாரிலால், நவ்ஷாத், பப்பிலஹரி, தென்னிந்தியாவில் திரை இசை திலகம் கே.வி.எம், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, இசைஞானி இளையராஜா என பலருக்கு தபேலா வாசித்துள்ளார். அதோடு இன்றைய இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஜி.விபிரகாஷ் என சுமார் 2500 படங்கள், 5-க்கும் அதிகமான மொழிகளில் ஏறக்குறைய 60,000 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் தபேலா பிரசாத்.
90-களில் பிரபலமான போவோமா ஊர்கோலம், மதுர மரிக்கொழுந்து வாசம், வராக நதிக்கரை ஓரம் பாடல், ராகங்கள் பதினாறு உருவான வரலாறு, பூவே செம்பூவே, முத்துமணி மாலை, ஒருநாளும் உனை மறவாத போன்ற பாடல்களில் வரும் தபேலா இசைக்கு சொந்தக்காரர் தபேலா பிரசாத் தான்.
18 வருஷம் கழிச்சும் அதே அன்போட அஜித் சார்... அம்பானி சங்கர் நெகிழ்ச்சி!
ரஜினி நடிப்பில் மெல்லிசை மன்னர் இசையில் வந்த தில்லு முல்லு, பில்லா படங்களுக்கு தபேலா வாசித்தவர், அதே ரீமேக்காக வெளியானபோது யுவன் இசையில் வந்த தில்லு முல்லு, பில்லாவுக்கும் தபேலா வாசித்தவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட தபேலா பிரசாத்தின் தந்தை ஜெகந்நாத ராவ், ஜெமினி ஸ்டுடியோவில் பர்மனண்ட் தபேலா கலைஞர். 7 வயதிலேயே கேள்வி ஞானத்தில் தபேலா வாசிக்க தொடங்கிய பிரசாத், தனது 14 வயதில் கண்டசாலாவின் ட்ரூப்பில் இணைந்தார்.
AK 62 Update: விக்னேஷ் சிவனுடன் அஜித்தின் 62-வது படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
80 வயதுக்கும் மேலான தபேலா பிரசாத், வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு காலமானார். இதையறிந்த இசைத்துறையினர் மற்றும் அவரது மாணவர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.