அனபெல் சேதுபதி பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அனபெல் சேதுபதியில் விஜய் சேதுபதி, தாப்ஸியுடன் யோகி பாபு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷிணி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

அனபெல் சேதுபதியில் விஜய் சேதுபதி, தாப்ஸியுடன் யோகி பாபு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷிணி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடக்கிற விஷயங்கள் அனைத்தும் திரையரங்குகளுக்கு பீதியை ஏற்படுத்துவதாகவே உள்ளன. ஒரு படம் எடுத்து, திரையரங்கு கிடைக்காமல் ஓடிடியில் வெளியிடுவதை ஒத்துக் கொள்ளலாம். விஜய் சேதுபதி, தாப்ஸி போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து, ஓடிடிக்காகவே படங்கள் தயாரித்தால்...? அனபெல் சேதுபதி அப்படித்தான் தயாராகியிருக்கிறது.

விஜய் சேதுபதியும், தாப்ஸியும் இணைந்து ஒரு ப்ரீயட் ஹாரர் படத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் கசிந்த 24 மணிநேரத்தில், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் என்று அறிவித்தார்கள். இரண்டே நாளில், இன்று மாலை 5 மணிக்கு பர்ஸ்ட் லுக்குடன் வெளியீட்டு தேதியையும் அறிவித்திருக்கிறார்கள். செப்டம்பர் 17 டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் படம் நேரடியாக வெளியாகும். விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட்டின் நாயகனாக இருந்தார். அவரை ஓடிடியின் நாயகனாக்கிவிடுவார்கள் போல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனபெல் சேதுபதியில் விஜய் சேதுபதி, தாப்ஸியுடன் யோகி பாபு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷிணி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோ படத்தை தயாரித்துள்ளது. தீபக் சுந்தர்ராஜன் என்பவர் இயக்கம்

செப்டம்பர் 9 ஆம் தேதி விஜய் சேதுபதி எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடித்த லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவித்துள்ளனர். அடுத்த நாள் செப்டம்பர் 10 விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் நேரடியாக தொலைக்காட்சியிலும், அதனையடுத்து ஓடிடியிலும் வெளியாகிறது. செப்டம்பர் 17 அனபெல் சேதுபதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது

Also read... கௌதம் வலையில் வீழ்ந்த சிவகார்த்திகேயன்...!

ஒருவார இடைவெளியில் மூன்று படங்கள். இதில் அனபெல் சேதுபதியில் அவருக்கும் தாப்ஸிக்கும் இரட்டை வேடங்களாம். தாங்குவாரா விஜய் சேதுபதி?
Published by:Vinothini Aandisamy
First published: