இந்தியாவின் முதல் பெண் குதிரையேற்ற வீராங்கனை ரூபா சிங்காக நடிக்கும் டாப்சி!

பெண் குதிரை ஜாக்கி ரூபா சிங் ராஜஸ்தானை பூர்விகமாக கொண்டவர். தற்போது சென்னையில் இவர் வசித்து வருகிறார்.

Vijay R | news18
Updated: August 1, 2019, 7:21 PM IST
இந்தியாவின் முதல் பெண் குதிரையேற்ற வீராங்கனை ரூபா சிங்காக நடிக்கும் டாப்சி!
நடிகை டாப்சி
Vijay R | news18
Updated: August 1, 2019, 7:21 PM IST
கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றில் டாப்சி நடிப்பதை தொடர்ந்து மற்றொரு பிரபல குதிரையேற்ற வீராங்கனை ரூபா சிங் பையோபிக்கிலும் அவர் நடிக்க உள்ளார்.

நடிகை டாப்சி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்  கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டாப்சி நடித்து உள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்களை மிதாலி ராஜின் பையோ பிக்கில் டாப்சி நடிக்க உள்ளார். இதற்காக அவர் விளையாடிய போட்டிகளின் வீடியோவை பார்த்து தன்னை தயார்படுத்தி வருகிறார்.


Also Read : கிரிக்கெட் வீராங்கனையாக உருவெடுக்கும் டாப்சி!
 இதனையடுத்து இந்தியாவின் முதல் பெண் குதிரையேற்ற வீராங்கனை ரூபா சிங் கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.Loading...

இந்த படத்தை இயக்குனர் சிவம் நாயர் இயக்க உள்ளார். பெண் குதிரை ஜாக்கியாக நடிப்பதற்கு மனதைரியம் உள்ள நடிகை வேண்டுமென்பதால் டாப்சியை அவர் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறிஉள்ளார்.

படத்தின் கதை டாப்சிக்கும் பிடித்த இருந்த போதும் தற்போது அவர் நடித்து வரும் படங்கள்  நிலுவையில் உள்ளதால் அவற்றையெல்லாம் முடித்து 2020ம் ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பெண் குதிரை ஜாக்கி ரூபா சிங்


பெண் குதிரை ஜாக்கி ரூபா சிங் ராஜஸ்தானை பூர்விகமாக கொண்டவர். தற்போது சென்னையில் இவர் வசித்து வருகிறார். பல தடைகளை தாண்டி அவர்  பெண் ஜாக்கியாக உருவெடுத்துள்ளார்.

குதிரையேற்ற போட்டிகளில் அவர் பங்கேற்பதை ஆரம்பத்தில் அவரது தாயரே மறுத்துள்ளார். தன்னம்பிக்கையும், உறுதியான மனதைரியத்துடன் ரூபா சிங் 3500க்கும் மேற்பட்ட குதிரையேற்ற போட்டிகளில் கலந்து கொண்டு 720 போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளார்.

Also Read: மியாமியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி!

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...