தாப்ஸி நடித்திருக்கும் ராஷ்மி ராக்கெட் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. நந்தா பெரியசாமி இந்த ரீமேக்கை இயக்குகிறார்.
ஓடிடி வந்த பிறகு நாயகி மையப் படங்கள் வெள்ளமாக வரத்தொடங்கியுள்ளன. அதிலும் தாப்ஸி ஓடிடியின் நாயகியாகவே மாறிவிட்டார். சமீபத்தில்தான் அவர் நடித்த ஹசீனா தில்ரூபா திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. சில தினங்கள் முன் அனபெல் சேதுபதி நேரடியாக ஓடிடியில் வெளியானது. அக்டோபர் 15-ஆம் தேதி அவர் நடித்துள்ள ராஷ்மி ராக்கெட் திரைப்படம் ஸீ 5 ஓடிடியில் வெளியாகிறது.
இந்தப் படத்தை ரோனி ஸ்க்ரூவிலா தயாரிக்க,
ஆகர்ஷ் குரானா என்பவர் இயக்கியுள்ளார். 2020-ல் படத்தை தொடங்கி இந்த வருடம்தான் முடித்தனர். இந்தப் படத்தின் சிறப்பம்சம் இதன் கதையை எழுதியவர் நந்தா பெரியசாமி. ஆர்யா நடித்த ஒரு கல்லூரியின் கதை
திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குனராக நுழைந்தவர். முதல் படத்துக்குப் பின் அவர் இயக்கிய இரு படங்கள் கவனம் பெறவில்லை. தற்போது கௌதம் கார்த்திக் நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை இயக்கி வருகிறார். இவரது கதைதான் ராஷ்மி ராக்கெட்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
படத்துக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து ராஷ்மி ராக்கெட்டை தமிழில்
ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். நந்தா பெரியசாமியே இந்த ரீமேக்கை இயக்க உள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.