Taapsee: நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் டாப்ஸியின் ’ஹசீன் தில்ருபா’!

டாப்சி

ஹசீனா தில்ரூபா நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. ஜுலை 2-ம் தேதி நெட்பிளிக்ஸில் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

  • Share this:
    டாப்ஸி நடித்திருக்கும் இந்திப் படம் ஹசீனா தில்ரூபா திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

    திரையரங்குகளுக்குப் போட்டியாகவும், தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாகவும் மாறியுள்ளன ஓடிடி தளங்கள். கொரோனா பெருந்தொற்றால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் ஓடிடி நோக்கி படையெடுக்கின்றனர். அந்த வகையில் நடிகை தாப்ஸியின் புதிய இந்திப் படம் ஹசீனா தில்ரூபா நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. ஜுலை 2-ம் தேதி நெட்பிளிக்ஸில் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

    ஹசீனா தில்ரூபா ஒரு த்ரில்லர் திரைப்படம். வினில் மேத்யூ படத்தை இயக்க, ஆனந்த் எல்.ராய், ஹிமன்ஸு சர்மா, பூஷன் குமார், கிருஷ்ணன் குமார் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். தாப்ஸியுடன் ஹர்ஷ்வர்தன் ரானே நடித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தாப்ஸி இந்தியில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். அதிகம் நாயகி மையப்படங்களே அவரது நடிப்பில் அதிகம் வருகின்றன. அதில் ஒன்று இந்தப் படம். திருமணம் குறித்து டாப்ஸியிடம் கேட்டதற்கு, இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை, எப்போது வருடத்துக்கு இரண்டு படங்கள் நடிக்கிற நிலை வருகிறதோ, அப்போது திருமணம் குறித்து முடிவெடுப்பேன் என கூறியுள்ளார்.

    தற்போது தாப்ஸி நடிப்பில் வருடத்துக்கு அரைடஜன் படங்கள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: