தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லால், எம்எஸ் பாஸ்கர் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் வெளியாகியுள்ள திரைப்படம் டாணாக்காரன். காவல் துறையில் சேர வேண்டும் என்ற கனவுளோடு வளரும் நாயகன் விக்ரம் பிரபு, தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி பள்ளியில் இணையும் பொழுது பயிற்சி பள்ளியில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகி உள்ளது. இதுவரை தமிழ் சினிமா பார்த்திடாத ஒரு களத்தில் படம் உருவாகியுள்ளதால் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கடத்துகிறது.
read more.. அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப்போட்டி.. வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு – முழு விவரம்..
பயிற்சிப் பள்ளியில் நடைபெறும் அரசியல், காவல்துறைக்கு உள்ள அதிகார போட்டி, நேர்மையாக செயல்பட நினைப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என காட்சிக்கு காட்சி இந்தத் திரைப்படம் காவல்துறைக்குள் உள்ள நிகழ்வுகளை கண் முன் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எம்எஸ் பாஸ்கர், போஸ் வெங்கட் என படத்தில் நடித்துள்ள நடிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் ஒரு சிறந்த திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக உருவாகியுள்ளது.
read more.. ஹிஜாப், ஹலால் மட்டும் போதாது.. வளர்ச்சித் திட்டங்கள்தான் முக்கியம் – கர்நாடக முதல்வருக்கு கட்சி மேலிடம் உத்தரவு
காவல்துறை உருவாக்கப்பட்ட காரணம் என்ன என்பதை படத்தின் டைட்டில் கார்டில் சொல்ல தொடங்கியது முதல் ஆங்கிலேயர்களின் ஆதிக்க வெறிக்கு பிறந்த குழந்தை இந்த காவல் குறை என க்ளைமாக்ஸில் பேசும் வசனம் வரை காவல்துறையில் உள்ள சிஸ்டம் குறைபாடுகளை காட்சிக்கு காட்சி இந்தத் திரைப்படம் அழுத்தமாக பேசுகிறது.
காக்கி உடை தொடங்கி காவல்துறை அணிவகுப்பு வரை எதற்காக நடைபெறுகிறது என தெரியாமலே பின்பற்றப்படும் காவல்துறைக்குள் உள்ள நடைமுறைகளை சாடியுள்ள திரைப்படத்தின் இயக்குனர் தமிழ் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதால் காவல்துறையில் பணியாற்றும் ஒரு காவலரின் கேள்வியாகவே ஒட்டு மொத்த படமும் பதிவு செய்யப்படுகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டார் வலைதளம் இதுவரை வெளியிட்ட திரைப்படங்களில் ஆகச் சிறந்த திரைப்படமாக உருவாகியுள்ள டானக்காரன் திரைப்படம் விக்ரம்பிரபு திரைவாழ்க்கையிலும் முக்கியமான ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.