முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார்!

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார்!

சிம்பு மற்றும் டி.ராஜேந்தர்

சிம்பு மற்றும் டி.ராஜேந்தர்

மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற டி ராஜேந்தர் பூரண குணமடைந்தார். இதனால் தன் தந்தை சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கி வேலைகளை கவனித்து வந்த சிலம்பரசன் சென்னை திரும்பினார். 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற டி.ராஜேந்தர் பூரண குணமடைந்து விட்டதாக சிலம்பரசன் தரப்பில் தெரிவித்துள்ளனர். 

நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் கடந்த மாதம் உடல்நல குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அப்போது அவரது வயிற்று பகுதியில் ரத்த கசிவு இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது.  அத்துடன் அதற்கான முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.  அதற்கான வேலைகளை டி.ராஜேந்திரன் மகனும் நடிகருமான சிலம்பரசன் முன்கூட்டியே அமெரிக்கா சென்று கவனித்து வந்தார்.

இந்த நிலையில் டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா மற்றும்  மருத்துவர் ஸ்ரீதர் ஆகியோருடன் கடந்த 14 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.  நியூயார்க்கில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Also read... வெள்ளிக்கிழமை வெளியாகிறது பொன்னியின் செல்வன் பட டீசர்!

அதில் டி.ராஜேந்தர் தற்போது பூரண குணமடைந்து விட்டார். மேலும் ஒரு மாத காலம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  இதனால் நியூயார்க்கில் இல்லமெடுத்து குடும்பத்தினருடன் டி.ராஜேந்தர் தங்கியுள்ளார்.

மேலும் 20 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கி தன் தந்தையின் சிகிச்சைக்கான வேலைகளை செய்து வந்த சிலம்பரசன்,  தற்போது சென்னை திரும்பியுள்ளார். அத்துடன் தான் நடிக்கும் திரைப்பட வேலைகளிலும் அவர் பங்கேற்று உள்ளார் என சிலம்பரசன் இறப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Simbhu, T Rajendar