முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / உயிருள்ளவரை உஷா... படப்பெயரைப்போல வாழ்க்கையை அமைத்துக் கொண்ட டி.ஆர்.

உயிருள்ளவரை உஷா... படப்பெயரைப்போல வாழ்க்கையை அமைத்துக் கொண்ட டி.ஆர்.

உயிருள்ளவரை உஷா

உயிருள்ளவரை உஷா

.டி.ஆர் திருமணத்தை ஒரு சுமையாக இதுவரை சொன்னதில்லை. அவரது மகன் சிலம்பரசனுக்கு திருமணம் என்பதே பயமுறுத்தும் விஷயமாக இருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

1980 இல் டி.ஆரின் முதல் படம் ஒரு தலை ராகம் வெளியாகி தமிழ்நாடே அதில் கட்டுண்டு கிடந்தது. அதில் நாயகியின் தோழியாக நடித்தவர் உஷா. அவரே தனது வாழ்க்கைத் துணைவி என அவரை 1982 இல் டி.ராஜேந்தர் திருமணம் செய்து கொண்டார். 1983 இல் டி.ஆர். இயக்கிய படத்தின் பெயர் உயிருள்ளவரை உஷா. தனது மனைவியின் பெயரில், அவர்மீதான காதலை வெளிப்படுத்தும் டைட்டில். இன்றுவரை அந்தத் தலைப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல் இல்லறம் நடத்தி வருகிறார் டி.ஆர்.

உயிருள்ளவரை உஷா பெயரில் ஒன்பது எழுத்துக்கள் வரும். அதன் பிறகு தான் எடுத்த அனைத்துப் படங்களின் பெயரும் ஒன்பது எழுத்தில் வருவது போல் பார்த்துக் கொண்டார் டி.ஆர். தங்கைக்கோர் கீதம், உறவைக்காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி, எங்க வீட்டு வேலன், ஒரு வசந்த கீதம், தாய் தங்கைப் பாசம், மோனிசா என் மோனலிசா, காதல் அழிவதில்லை...

மெளன ராகம் 2 சீரியல் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. பொண்ணு யாரு தெரியுமா?

என எல்லாமே ஒன்பது எழுத்து டைட்டில். கடைசியாக வெளிவந்த வீராச்சாமி மட்டும் விதிவிலக்கு.டி.ஆர் திருமணத்தை ஒரு சுமையாக இதுவரை சொன்னதில்லை. அவரது மகன் சிலம்பரசனுக்கு திருமணம் என்பதே பயமுறுத்தும் விஷயமாக இருக்கிறது. ஒரு தலைமுறை இடைவெளியில்தான் எத்தனை மாற்றங்கள்.உயர்ந்த  மனிதர், சிறந்த கலைஞர் டி.ஆருக்கு திருமண நாள் வாழ்த்துகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Simbhu, Kollywood, T Rajendar