தந்தை டி. ராஜேந்தரின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக மகன் சிலம்பரசன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். டி.ஆர். எப்போது அமெரிக்கா செல்கிறார் என்கிற விபரமும் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவராக இருக்கும் டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் 19-ம்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் நலம்பெற திரையுலகத்தினரும், டிஆரின் நலன் விரும்பிகளும் பிரார்த்தித்தனர். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த சிகிச்சையின்போது உயர் சிகிச்சைக்காக அவரை அமெரிக்கா அழைத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது மகன் சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க - நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விழாவின் முக்கிய நிகழ்வுகள்!
அங்கு அவர், டிஆரின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். சென்னையில் இருந்து டி.ஆர். நாளை மறுதினம் அமெரிக்கா புறப்பட்டு செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிஆர் அமெரிக்கா சென்றதும் அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை நடைபெறும் என்று கூறப்படுகிறது. முன்னதாக சிங்கப்பூருக்கு சிகிச்சைகாக டிஆர் கொண்டு செல்லப்படுவார் என தகவல்கள் வெளியான நிலையில், அவரது குடும்பத்தினர் அமெரிக்காவை தேர்வு செய்துள்ளனர்.
சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியீட்டிற்காக தயாராக உள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 3ம் வாரத்தில் தியேட்டருக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க - இந்த ஹிட் பாடல்களை எழுதியது விக்னேஷ் சிவனா? இளம் இயக்குனரின் இன்னொரு பக்கம்
தற்போது சிலம்பரசன் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான முப்தி படத்தின் ரீமேக்தான் இந்த பத்து தல.
கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் நடிகரான சிவக்குமார் செய்திருந்த பவர்ஃபுல் டான் கேரக்டரை, ஏற்று சிம்பு நடித்து வருகிறார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.