ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பான் இந்தியா படத்தை அப்போவே முயற்சி செய்தேன், இப்போ என் பேரனை நடிகரா அறிமுகப்படுத்துகிறேன்' - டி.ராஜேந்தர் அதிரடி

பான் இந்தியா படத்தை அப்போவே முயற்சி செய்தேன், இப்போ என் பேரனை நடிகரா அறிமுகப்படுத்துகிறேன்' - டி.ராஜேந்தர் அதிரடி

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

மோனிஷா என் மோனலிசா படத்தை ஹிந்தியில் எடுத்து பான் இந்திய படமாக வெளியிட முடிவு செய்தேன். அப்போது டிஜிட்டல் வசதி இல்லை - டி.ராஜேந்தர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞர் டி.ராஜேந்தர் கடைசியாக கவண் என்ற படத்தில் நடித்திருந்தார். எதுகை மோனையில் அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களிடயே மிக பிரபலம்.  நடிகர் விஜய் நடித்த புலி இசை வெளியிட்டு விழாவில் இது அட்டாக் பண்ற புலி என அவர் பேசியது இன்றளவும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக பகிரப்பட்டுவருகிறது. சமீபத்தில் வெளியான வாரிசு படத்தில் கூட நடிகர் விஜய் அவரது பாணியில் பேசி கைத்தட்டல்களை அள்ளினார்.

தனது மகன் சிம்புவை காதல் அழிவதில்லை படத்தின் ஹீரோவாக அறிமுகப்படுத்திய டி.ராஜேந்தர், தனது இரண்டாவது மகன் குறளரசனை இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் 3வது தலைமுறையாக தனது பேரனையும் பாடகராக அறிமுகப்படுத்தியிருக்கிறார் டி.ராஜேந்தர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு தனது டி.ஆர் வந்தே வந்தே மாதரம் என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இதில் அவரது பேரன் ஜேசன் பாடகராகவும் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த பாடல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு டி.ராஜேந்தர் பேசினார்.

அதில், ''என்னிடம் ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன. அவற்றை வெளியிட டி.ஆர்.ரெக்கார்ட்ஸ் ஆரம்பித்துள்ளேன். இதன் மூலம் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதில் முதல் பாடலாக வந்தே மாதரம் பாடலை என் தாய்மொழி தமிழ் மற்றும் இந்தியில் வெளியிட்டுள்ளேன். மோனிஷா என் மோனலிசா படத்தை ஹிந்தியில் எடுத்து பான் இந்திய படமாக வெளியிட முடிவு செய்தேன். அப்போது டிஜிட்டல் வசதி இல்லை.

இப்போதும் பான் இந்தியா அளவில் படமெடுத்து என் பேரன் ஜேசனை அறிமுகப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் இடையில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இப்போது இறைவன் அருளால் மீண்டும் வந்துள்ளேன். எனவே, மீண்டும் அந்த பான் இந்தியா படத்தைத் தொடங்க உள்ளேன் என்றார்.

First published:

Tags: Simbu, T Rajendar