முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / உடல் நலம் குணமடைந்து வரும் டி. ராஜேந்தர்… ரசிகர்களுக்கு நிம்மதியளிக்கும் தகவல்

உடல் நலம் குணமடைந்து வரும் டி. ராஜேந்தர்… ரசிகர்களுக்கு நிம்மதியளிக்கும் தகவல்

அமெரிக்க மருத்துவமனையில் டி ராஜேந்தர். உடன் மனைவி உஷா, மகன் சிம்பு.

அமெரிக்க மருத்துவமனையில் டி ராஜேந்தர். உடன் மனைவி உஷா, மகன் சிம்பு.

T Rajendar Health : விரைவில் சிகிச்சைகளை முழுமையாக முடித்துக் கொண்டு டி. ராஜேந்தர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் டி. ராஜேந்தர் உடல் நலம் குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிம்பு மற்றும் டி ராஜேந்தர் ரசிகர்கள்  நிம்மதி அடைந்துள்ளனர்.

விரைவில், சிகிச்சையை முழுவதுமாக முடித்துக் கொண்டு டி.ராஜேந்தர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி ராஜேந்தருக்கு கடந்த மாதம் 19-ம்தேதி உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த குழாயில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர். டி ராஜேந்தரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலன் விசாரித்தார்.

Also read... கமலா, ரஜினியா யார் காமெடி நடிப்பில் சிறந்தவர்? - சூடுபிடிக்கும் விவாதம் 

இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டில் டி ராஜேந்தருக்கு சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, மகன் சிம்பு அதற்கான ஏற்பாடுகளை கவனித்தார். டி ராஜேந்தருக்கு முன்பாக அமெரிக்கா சென்ற சிம்பு, அங்கு தந்தைக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதையடுத்து, குடும்பத்தினருடன் டி ராஜேந்தர் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டி ராஜேந்தர், தான் நலமுடன் திரும்பி வருவதாக நம்பிக்கையுடன் கூறினார்.

இந்நிலையில் அமெரிக்காவில் டி ராஜேந்தர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை நிம்மதி  அடையவைத்துள்ளது. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் டி ராஜேந்தர் குணம் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு - ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்... 

விரைவில் சிகிச்சைகளை முழுமையாக முடித்துக் கொண்டு டி. ராஜேந்தர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: T Rajendar