முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘சிம்பு படத்தில் வல்லவன், நிஜத்தில் நல்லவன் ’ – மகனை புகழ்ந்து பாராட்டிய டி.ராஜேந்தர்

‘சிம்பு படத்தில் வல்லவன், நிஜத்தில் நல்லவன் ’ – மகனை புகழ்ந்து பாராட்டிய டி.ராஜேந்தர்

சிலம்பரசன் - டி ராஜேந்தர்

சிலம்பரசன் - டி ராஜேந்தர்

பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் என் மகன் பெற்றோர்களுக்காக கடின உழைப்பு செய்து வருகிறார். – டி. ராஜேந்தர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக புறப்பட்டுச் சென்ற தமிழ் சினிமா ஜாம்பவான் டி ராஜேந்தர் மகன் சிம்புவை புகழ்ந்து பாராட்டியுள்ளார். கண்ணீர்மல்க அவர் அளித்திருக்கும் பேட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்லும் முன்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மகன் சிம்புவைப் பற்றி டி. ராஜேந்தர் கூறியதாவது-

நான் மேல் சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல என் மகன் சிம்பு தான் காரணம். எங்களுக்காக படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறான்.

நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. என் முகத்தில் தான் தாடி வைத்து இருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் எதையும் மூடி வைத்தது இல்லை. நான் இன்று தான் அமெரிக்கா செல்கிறேன். ஆனால் அதற்கு முன்னதாகவே பல கதைகளை எழுதி நான் அமெரிக்கா சென்று விட்டதாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

இதையும் படிங்க - ‘சினிமாடிக்கெட் விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்’ - தயாரிப்பாளர்கள் கோரிக்கை

நானே ஒரு நடிகன், இயக்குனர். எனக்கே கதை எழுதி திரையிட முயற்சிக்கின்றனர். விதியை மீறி எதுவும் நடக்காது. எனக்காக பிரார்த்தனை செய்த கட்சிக்காரர்கள், என் ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள் என்னுடைய அபிமானிகள்  அனைவருக்கும் நன்றி.

நான் இன்று வெளிநாடு சென்று மருத்துவம் பார்ப்பதற்கான காரணம் எனது மகன் சிலம்பரசன் தான். அவன் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் நான் ஒப்புக் கொண்டேன். சிம்பு படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு தாய் தந்தைக்காக 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறான்.

இதையும் படிங்க - எந்தெந்த நடிகர்களின் படங்கள் இதுவரை 10 நாட்களில் 300 கோடி வசூல் செய்துள்ளது ?

என் மகனை நான் மன்மதனாக மட்டும் வளர்க்கவில்லை. மரியாதை தெரிந்தவனாகவும் வளர்த்துள்ளேன். சிம்பு படத்தில் வல்லவன் நிஜத்தில் நல்லவன்.

பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் என் மகன் பெற்றோர்களுக்காக கடின உழைப்பு செய்து வருகிறார். இப்படி ஒரு மகனை பெற்றதற்கும், குருவாக இருந்து ஒரு நல்ல சிஷ்யனை உருவாக்கியதற்கும்  நான் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு டி. ராஜேந்தர் கூறினார்.

First published:

Tags: T Rajendar