Home /News /entertainment /

T Rajendar: தமிழ் மீது தீராக் காதல்... டி.ராஜேந்தரின் லேட்டஸ்ட் வீடியோ

T Rajendar: தமிழ் மீது தீராக் காதல்... டி.ராஜேந்தரின் லேட்டஸ்ட் வீடியோ

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

நெப்போலியன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோருடன் டி.ராஜேந்தர் தனது தனித்துவமான ரைமிங் பாணியில் தமிழில் பேசியதோடு, நியூயார்க் தமிழ்ச்சங்க நிகழ்வுகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

    நடிகர் டி.ராஜேந்தரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் தமிழ் மீதான தனது பற்றை வெளிப்படுத்தியுள்ளார் டி.ஆர்.

    பன்முகத் திறமை கொண்ட நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநரான டி.ராஜேந்தர், சமீபத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால், அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி உஷா ராஜேந்தர், மகன் குறளரசன் உள்ளிட்ட குடும்பத்தினர் அவருடன் உள்ளனர். தனது தந்தைக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, குடும்பத்தினரை அமெரிக்காவில் விட்டு விட்டு, தனது படப்பிடிப்பு பணிகளை முடிப்பதற்காக சென்னை திரும்பியுள்ளார்.

    டிஆரின் உடல்நிலை குறித்து கவலையில் இருக்கும் ரசிகர்களுக்கு இணையத்தில் வைரலாகி வரும் சமீபத்திய வீடியோ நிச்சயம் மகிழ்ச்சியை தரும். அந்த வீடியோ கிளிப்பில், அவரது சமகால நடிகர்களான நெப்போலியன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோருடன் டி.ராஜேந்தர் தனது தனித்துவமான ரைமிங் பாணியில் தமிழில் பேசியதோடு, நியூயார்க் தமிழ்ச்சங்க நிகழ்வுகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதோடு தான் எங்கு இருந்தாலும், தமிழர்களின் மீதான தனது அன்பு என்றும் குறையாது என்றார்.

    கவனம் பெறும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரொமாண்டிக் படம்!



    தமிழ்ச் சங்க நிகழ்வில் கலந்துக் கொள்ள முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்த டி.ஆர், ஆனால் தான் நலமுடன் இருப்பதில் தனது ரசிகர்கள் மகிழ்ச்சியடைவதாகவும், தான் விரைவில் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Simbu

    அடுத்த செய்தி