ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - டி.ராஜேந்தர்

நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - டி.ராஜேந்தர்

டி ராஜேந்தர்

டி ராஜேந்தர்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என டி.ராஜேந்தர் பேசியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதில் டி.ராஜேந்தர் தலைமையிலான அணியும், தயாரிப்பாளர் முரளி தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றனர்.

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்பதால் அனைவரும் நேரில் வந்து வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர். பின்னர் பேசிய டி.ராஜேந்தர், பெருந்தொகை நடிகர்களுக்கு சம்பளமாக செல்வதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறினார். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் பேசினார்.

Also read... இயக்குனர் அஜூ இயக்கத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் டிராமா...!

தன்னுடைய மகன் சிலம்பரசனுக்கு நான் ஃபாதர். கடவுள்தான் காட் ஃபாதர். அவர் சிம்புவின் பிரச்னைகளை பார்த்துக் கொள்வார். நான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கும் பிரச்னைகளை சரி செய்ய வந்திருக்கிறேன் என்றும் டி.ஆர்.பேசினார்.

இன்று மாலை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது. பின்னர் வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டு 29-ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: T Rajendar, Tamil cinema Producer council