சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரபல நடிகரும் மற்றும் இயக்குனருமான டி ராஜேந்திரன் இரவில் காரில் சென்றுள்ளார். தனது பேத்தி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்குச் சென்று இளங்கோ சாலை வழியாக காரில் செல்லும்போது முதியவர் ஒருவர் மீது மோதியுள்ளது. பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய காரை பிடிக்க முயலும் போது, காரில் பயணித்துக் கொண்டிருந்த இயக்குனர் டி ராஜேந்திரன் இறங்கி 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்துள்ளார்.
மறுநாள் சனிக்கிழமை அன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இயக்குனர் டி ராஜேந்திரனின் காரை விபத்தின் போது ஓட்டிய ஓட்டுநர் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Also Read : நடிகை மீரா மிதுனுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட்
மேலும் இயக்குனர் டி ராஜேந்திரன் காரை பறிமுதல் செய்து வைத்துள்ளனர். மேலும் ஓட்டுநர் செல்வத்திற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் குடி போதையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஓட்டுனர் செல்வத்தை நிலைய ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
முதியவர் மீது இயக்குனர் டி ராஜேந்திரன் கார் மோதி விபத்தான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரின் உரிமையாளர் பிரபல இயக்குனர் டி ராஜேந்திரனின் மகன் பிரபல நடிகர் சிலம்பரசன் பெயரில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய முதியவர் குறித்து விசாரணை நடத்தியதில் தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பது தெரியவந்துள்ளது. தற்போது விபத்தில் சிக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால், 304ஏ சட்ட பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: T Rajendar