விநியோகஸ்தர் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்.. டி.ஆர்.அதிரடி

டி.ராஜேந்தர் தலைமையிலான அணி

விநியோகஸ்தர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவும் தயார் என நடிகர் டி.ராஜேந்தர் ஆவேசமாக பேசியுள்ளார்.

  • Share this:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் நவம்பர் 22 -ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் டி.ராஜேந்தர், முரளி மற்றும் தேனப்பன் தலைமையிலான அணி என மும்முனை போட்டி நிலவுகிறது.

டி ராஜேந்தர் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராகவும் இருப்பதால் அச்சங்கத்தின் விதிமுறைப்படி மற்ற சங்கத்தின் பொறுப்புகளுக்காக போட்டியிடக்கூடாது என்று எதிர்தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

அதற்கு பதிலளித்த டி.ராஜேந்தர், செயற்குழுவில் ஏற்கனவே ஒப்புதல் பெற்று விட்டோம் என்ற காரணத்தினால் பொதுக்குழுவை கூட்ட இயலவில்லை. ஒருவேளை பொதுக்குழு கூட்டப்படும் போது ஒப்புதல் கிடைக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்யவும் தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் தனது தலைமையிலான ‘தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணியை’ அறிமுகம் செய்து வைத்த டி.ராஜேந்தர், சங்கத்தில் வைப்பு நிதியாக இருந்த ரூ.7 கோடி மாயமாகியுள்ளது என்றும் தான் வெற்றி பெற்றால் அந்தத் தொகை என்ன ஆனது என கண்டுபிடிப்பேன் என்றும் தெரிவித்தார்.மேலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக பல திட்டங்கள் தன்னிடம் இருப்பதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

டி.ராஜேந்தர் தலைமையிலான தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணியில் தலைவர் பதவிக்கு ராஜேந்தரும், செயலாளராக மன்னன், என்.சுபாஷ் சந்திரபோஸும், பொருளாளராக கே.ராஜனும், துணைத்தலைவர் பொறுப்புக்கு பி.டி.செல்வகுமார் மற்றும் கே.முருகன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published: