பட விழாவில் சிரஞ்சீவி காலில் விழுந்த விஜய் சேதுபதி! - காரணம் இதோ...

பட விழாவில் சிரஞ்சீவி காலில் விழுந்த விஜய் சேதுபதி! - காரணம் இதோ...
சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி
  • News18
  • Last Updated: September 23, 2019, 8:30 PM IST
  • Share this:
சைரா நரசிம்ம ரெட்டி படவிழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, நடிகர் சிரஞ்சீவி காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார்.

தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிரஞ்சீவி நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பின் உருவாகும் சரித்திர படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

சிரஞ்சீவியின்  151-வது படமான இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ‘கொனிடேலா'  என்ற நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தை விளம்பரத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் விழாவில் சிரஞ்சீவி, விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிரஞ்சீவி பேசும் போது விஜய்சேதுபதியை வெகுவாக புகழ்ந்து பேசினார். சிரஞ்சீவி பேசும்போது, “தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி இந்தப் படத்துக்காக கடினமாக உழைத்தார். என் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள விஜய் சேதுபதி அண்ணா என்றுதான் அழைப்பார். இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி” என்று கூறினார்.தொடர்ந்து தன்னை புகழ்ந்து பேசுவதை அமைதியாக கவனித்து வந்த விஜய்சேதுபதி சிரஞ்சீவி அருகில் சென்று காலில் விழுந்து ஆசி பெற்றார். விஜய் சேதுபதி காலில் விழுவதை உடனடியாக கவனித்த சிரஞ்சீவி கைகளைப் பிடித்து தடுத்தார். இதை சமூகவலைதளத்தில் ஒரு சிலர் விமர்சித்தாலும், குரு - சிஷ்யன் இடையேயான நெகிழ்ச்சியான தருணம் என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading