Home /News /entertainment /

‘சுழல் வெப்சீரிஸ் தியேட்டர்களில் வெளியாக வேண்டுமென விரும்பினேன்’ – ஐஷ்வர்யா ராஜேஷ் பேட்டி

‘சுழல் வெப்சீரிஸ் தியேட்டர்களில் வெளியாக வேண்டுமென விரும்பினேன்’ – ஐஷ்வர்யா ராஜேஷ் பேட்டி

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Suzhal Web Series : சுழல் வெப்சீரிஸில் பார்த்திபன், ஐஷ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டிஉள்ளிட்டோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை சுழல் வெப் சீரிஸ் பெற்றுள்ளது. இந்த வெப் சீரிஸ் தியேட்டர்களில் வெளியாக விரும்பியதாக அதில் முக்கிய கேரக்டரில் நடித்த ஐஷ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

    ஆர்.ஆர்.ஆர்., பாகுபலி , ரஜினி சாரின் படங்களை நான் எப்போதும் ஓடிடியில் பார்ப்பதற்கு விரும்ப மாட்டேன். இவையெல்லாம் பெரிய திரையில் காண வேண்டிய படங்கள்.

    கொரோனா பிரச்னை காரணமாக சுழல் வெப் சீரிஸின் படப்பிடிப்பு சில நேரங்களில் ஒத்தி வைக்கப்பட்டது. அதே நேரம் எங்களுடைய கேரக்டர்களுக்காக நாங்கள் மற்ற படங்களில் நடிக்காமல், ஷூட்டிங் மீண்டும் தொடங்குவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.

    முன்பு க.பெ. ரணசிங்கம் படத்தை நான்ரசிகர்களுடன் தியேட்டரில் பார்த்தேன். அப்போது, ரசிகர்கள் படத்தின் சில சீன்களைப் பார்த்து அழுததை காண முடிந்தது.

    Also read... ஜெயிலர் படம் ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்! 

    அதைப் போன்றுதான் சுழல் வெப் சீரிசும் தியேட்டரில் வெளியாகி இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஒவ்வொரு எபிசோடிலும்  மக்கள் நன்றாக ரசிக்கும் வகையில் 3-4 காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

    மிர்சாப்பூர், பாதாள லோக் மற்றும் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ்கள், வட மாநில மக்களைப் பற்றிய பார்வையை மாற்றியது. அதே போன்றுதான் இங்கிருந்து எடுக்கப்பட்டுள்ள சுழல் வெப் சீரிஸ் தமிழ் நாட்டைப் பற்றிய புரிதலை உலக அளவில் ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள சுழல் வெப் சீரிஸ் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலக அளவில் 30 மொழிகளில் இந்த வெப்சீரிஸை வெளியிட்டுள்ளார்கள்.

    சினிமா பத்திரிக்கையாளரை மணக்கும் கார்த்தியின் சர்தார் பட இயக்குநர் - குவியும் வாழ்த்துகள்! 

    விக்ரம் – வேதா படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி ஆகியோர் சுழல் வெப்சீரிசுக்கு கதை வடிவமைத்துள்ளனர். இதில், பார்த்திபன், ஐஷ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டிஉள்ளிட்டோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actress Aishwarya Rajesh

    அடுத்த செய்தி