ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ஒரே நடிகை சுஷ்மிதா சென்... காரணம் இதுதான்!

கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ஒரே நடிகை சுஷ்மிதா சென்... காரணம் இதுதான்!

லலித் மோடி - சுஷ்மிதா சென்

லலித் மோடி - சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென் முன்பு, மாடல் ரோஹ்மன் ஷால் உடன் டேட்டிங் செய்து வந்தார். பின்னர் 2021-ல் அவர்கள் பிரிந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுஷ்மிதா சென் மிகவும் திறமையான பாலிவுட் நடிகைகளில் ஒருவர். அவர் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

அந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார் சுஷ்மிதா சென். லலித் மோடி நான்காவது இடத்தில் இருப்பதைப் பார்க்கும்போது, அவர்களின் காதல் விவகாரம் அவர்களை கூகுளில் அதிகம் தேட வைத்திருப்பது புரிகிறது.

சுஷ்மிதா மற்றும் லலித் இருவரும் இன்ஸ்டாகிராமில் தங்களின் படங்களை பகிர்ந்து, தங்கள் ரிலேஷன்ஷிப்பை அதிகாரப்பூர்வமாக்கிய செய்தி இணையத்தில் வைரலானது. பலரும் சுஷ்மிதாவும், லலித் மோடியும் திருமணம் செய்து கொண்டார்கள் என்றெல்லாம் பதிவிட்டு வந்தனர். பலரோ எப்படி இந்திய அரசை ஏமாற்றிவிட்டு ஒடிபோன லலித்தோடு சுஷ்மிதா இப்படி செய்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் கோபத்தோடு ட்வீட் பதிவிட்டனர். இதற்கிடையே தாங்கள் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றும் டேட்டிங் மட்டுமே செய்து வருவதாகவும் இருவரும் அறிவித்தனர்.

சுஷ்மிதா சென் முன்பு, மாடல் ரோஹ்மன் ஷால் உடன் டேட்டிங் செய்து வந்தார். பின்னர் 2021-ல் அவர்கள் பிரிந்தனர்.

முன்னணி தளத்திற்கு வெப் சிரீஸ் இயக்கும் வெற்றிமாறன் - உறுதிப்படுத்திய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்!

இதற்கிடையில், வேலையைப் பொறுத்தவரை, 'தாலி' படத்தில் திருநங்கை மற்றும் சமூக ஆர்வலர் கௌரி சாவந்தின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சுஷ்மிதா. இது தவிர, ராம் மத்வானியின் 'ஆர்யா 3' படமும் அவரது கைவசம் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: YearEnder 2022