Home /News /entertainment /

ஹாட் ஸ்டாரில் நாளை வெளியாகும் சுஷ்மிதா சென்னின் ஆர்யா 2 வெப் தொடர்..

ஹாட் ஸ்டாரில் நாளை வெளியாகும் சுஷ்மிதா சென்னின் ஆர்யா 2 வெப் தொடர்..

ஆர்யா 2

ஆர்யா 2

Sushmita Sen Arya 2 web series: ஆர்யா 2 வெப் தொடர் நாளை வெளியாகிறது.

கடந்த சில வருடங்களில் இந்தியில் வெளியான க்ரைம் த்ரில்லர் வெப் தொடர்களில் குறிப்பிடத்தகுந்த வெப் தொடர் ஆர்யா. சுஷ்மிதா சென் பிரதான வேடத்தில் நடித்திருந்த இந்த வெப் தொடர் கடந்த 2020 ஜுனில் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியானது.அதன் இரண்டாவது சீஸன் நாளை வெளியாகிறது.

பெண்களை மைய கதாபாத்திரமாக்கி உலக அளவில் நிறைய க்ரைம் வெப் தொடர்கள் வருகின்றன. பொதுவாக அதில் மைய கதாபாத்திரம் போலீஸ் அதிகாரியாக க்ரைமை கண்டுப்பிடிக்கும் பொறுப்பில் இருப்பார். அல்லது பிரச்சனையில் மாட்டி, அதை எதிர்த்து சர்வைவலுக்கான போராட்டத்துடன் இருப்பார். ஆர்யா இரண்டாவது வகை.

நல்ல மனைவி, சிறந்த அம்மா என்று தானுண்டு தன் குடும்பம் உண்டு என இருக்கும் ஆர்யா ஷரீனின் வாழ்க்கையில் புயலடிக்கிறது. அவளது கணவனை யாரோ சுட்டுக் கொன்று விடுகிறார்கள். கணவனும், அவனது சகோதரர்களும் போதை மருந்து வியாபாரத்தில் இருப்பது அவளுக்கு தெரியாது. அவளது தந்தையே ஒரு பெரும் கிரிமினல். அத்துடன் பெரிய க்ரைம் சிண்டிகேட் ஆர்யாவின் குடும்பத்தையே அழிக்கப் பார்க்கிறது. அதிலிருந்து தப்பித்து ஒருவழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லலாம் என்கிற போது அவளது திட்டத்தை அறிந்து கொண்டு க்ரைம் சிண்டிகேட்டிடம் இருந்து போன் வருகிறது. அத்துடன் முதல் சீஸனை முடித்திருந்தார்கள்.

Also read : டீஸர் வெளியீட்டில் சிம்புவின் நம்பர் சென்டிமெண்ட்..
 இரண்டாவது சீஸன் நாளை வெளியாகிறது. இந்த வருடம் வெளியான வெப் தொடர் இரண்டாவது சீஸனில் தி பேமிலி மேன் ஓகேவாக இருந்தது. ஸ்பெஷல் ஆப்ஸ் சொதப்பியிருந்தனர். ஆர்யா 2 எப்படி இருக்கும் என்பது நாளை தெரியும். ஆனாலும் சுஷ்மிதா சென்னுக்காக தொடரை கண்டிப்பாகப் பார்க்கலாம்.
நெதர்லாந்து வெப் தொடரான பெனோஸாவின் (Penoza) அதிகாரப்பூர்வ ரீமேக்தான் ஆர்யா. பெனோஸா 2017 வரை ஐந்து சீஸன்கள் வெளிவந்துள்ளன.




உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Bollywood

அடுத்த செய்தி