அப்பாக்கள் தினத்தில் தந்தைக்கு முடிவெட்டி விட்ட சிரஞ்சீவியின் மகள்

தந்தையர் தினத்தன்று சிரஞ்சீவியின் மகள் அப்பாவுக்கு முடிவெட்டி விட்டுள்ளார்.

அப்பாக்கள் தினத்தில் தந்தைக்கு முடிவெட்டி விட்ட சிரஞ்சீவியின் மகள்
சிரஞ்சீவியுடன் அவரது மகள்
  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று பலரும் தந்தையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

திரைத்துறை பிரபலங்கள் தங்களது அப்பாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்து பதிவிட்டு வரும் நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தனது தந்தைக்கு முடிவெட்டி விடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், “அப்பா, அன்புக்கு நன்றி. ஒரு எளிய முடி வெட்டுதல் முதல் வாழ்க்கையின் பல முக்கியமான விஷயங்கள் வரை நீங்கள் எப்போதும் என்னை நம்பினீர்கள், இது இன்று என்னை நம்பிக்கையுள்ள நபராக மாற்றியது. இதுதான் தந்தையர். அவர்கள் எங்களுக்கு அதிகாரம் அளிக்கிறார்கள்.” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


இந்த வீடியோ பதிவுக்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading