சுஷாந்த் சிங் தற்கொலை: நடிகை ரியாவின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மும்பைக்கு மாற்றக் கோரி நடிகை ரியா சக்ரபோர்த்தி தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

சுஷாந்த் சிங் தற்கொலை: நடிகை ரியாவின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
சுஷாந்த் சிங், ரியா சக்ரபோர்த்தி
  • Share this:
சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளையெல்லாம் மும்பைக்கு மாற்றும்படி நடிகை ரியா கோரியிருந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பீகாரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை, மும்பைக்கு மாற்ற இயலாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், ரியா மீதான குற்றச்சாட்டு கடுமையானது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also read: ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்கள் உடலை கொண்டு வர நடவடிக்கை தேவை - வெளியுறவுத் துறை அமைச்சரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

முன்னதாக, சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் பணபரிமாற்றம் செய்யப்பட்டதாக தொடர்பான புகாரில், நடிகை ரியா மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார். தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக், சுஷாந்துடன் ஒரே வீட்டில் வசித்த அவரது நண்பர் சித்தார்த் பிதானியும் விசாரணைக்கு ஆஜரானார். தொடர்ந்து, இன்றைய தினம், மும்பையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்தல், நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி மித்து சிங் ஆஜராகினார்.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading