வலியில்லாத மரணம்... கடைசி நேரத்தில் சுஷாந்த் சிங் கூகுளில் தேடிய வார்த்தைகள் இதுதான் - மும்பை போலீஸ் தகவல்

கூகுளில் சுஷாந்த் சிங் தேடிய வார்த்தைகள் குறித்து மும்பை காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

வலியில்லாத மரணம்... கடைசி நேரத்தில் சுஷாந்த் சிங் கூகுளில் தேடிய வார்த்தைகள் இதுதான் - மும்பை போலீஸ் தகவல்
சுஷாந்த் சிங்
  • Share this:
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் நெருங்கிய தோழியான ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் சமூகவலைதளம் வாயிலாக சமீபத்தில் கோரிக்கை வைத்தார்.

ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சுஷாந்திடம் நிதி மோசடியில் ஈடுபட்டு மன ரீதியாக துன்புறுத்தியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் சுஷாந்தின் தந்தை அளித்த புகாரில், “சுஷாந்த் சிங்குக்குச் சொந்தமான ரு.1.5 கோடி அவருக்குத் தொடர்பில்லாத வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங்கிடம் இருந்த லேப்டாப், பணம், நகைகள், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றை ரியாவும் அவரது குடும்பத்தினரும் திருடிவிட்டார்கள். சுஷாந்தின் மருத்துவ அறிக்கைகளை வெளியில் சொல்வதாக மிரட்டியுள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதையடுத்து ரியா சக்ரபோர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பாட்னா காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் நடிகை ரியா மனு தாக்கல் செய்துள்ளார். தங்கள் தரப்பு பதிலைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி சுஷாந்த் சிங்கின் தந்தை சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுஷாந்த் கடைசியாக கூகுளில் தேடிய வார்த்தைகள் என்னென்ன என்பது குறித்து மும்பை காவல்துறை தகவல் கூறியுள்ளது. கூகுளில் தனது பெயரில் என்னென்ன செய்திகள் வெளியாகியுள்ளன என்று தேடியிருக்கும் சுஷாந்த், வலியில்லா மரணம் (Painless Death) இருதுருவ நோய் என்கிற மனநலக் குறைபாடு ( Bipolar Disorder) மனச்சிதைவு ஆகிய வார்த்தைகளையும் கூகுளில் தேடியுள்ளார். இத்தகவலை மும்பை காவல் ஆணையர் பரம்பிர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான வழக்கில், இதுவரை 56 பேரிடம் வாக்குமூலம் பெற்றிருப்பதாகவும், அதில் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் 2 முறை வாக்குமூலம் பெற்றிருப்பதாகவும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மும்பை காவல் ஆணையர் பரம்பிர் சிங் தெரிவித்துள்ளார்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading